For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஈரானின் இடைக்கால அதிபராகும் முகமது மொக்பர்..! யார் இந்த மொக்பர்…! முழு விவரம்..!

Who is Mohammad Mokhber, Iran's interim president? Mohammad Mokhber worked in state-affiliated financial organizations before entering politics. He will lead the Iranian government until its presidential election, which must take place within 50 days.
06:40 AM May 21, 2024 IST | Kathir
ஈரானின் இடைக்கால அதிபராகும் முகமது மொக்பர்    யார் இந்த மொக்பர்…  முழு விவரம்
Advertisement

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஈரான் அதிபர் ரைசி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன் உயிரிழந்தனர்.

Advertisement

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவை அடுத்து, ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து புதிய இடைக்கால அதிபராக முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 1, 1955 இல் பிறந்த முகமது மோக்பர், விபத்தில் பலியான அதிபர் ரைசியைப் போலவே, முன்னாள் அதிபர் அலி கமேனிக்கு நெருக்கமானவர். 2021-ல் ரைசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மொக்பர் முதல் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முகமது முக்பர், ஈரான் நாட்டின் புரட்சியின் தந்தை கொமேனி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட முதலீட்டு அமைப்பான "செட்டாட்" அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்தார். அணு ஆயுத விவகாரங்களில் 2010ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தடைப் பட்டியலில் முகமது மொக்பர் பெயரும் கூட இடம் பெற்றிருந்தது. அதற்கு பிறகு முகமது மொக்பர் பெயரை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கிவிட்டது. முகமது மொக்பர் தலைமை வகித்த முதலீட்டு அமைப்பான செட்டாட் மற்றும் 37 நிறுவனங்கள் 2013-ல் அமெரிக்கா கருவூலம் தடை விதித்த பட்டியலில் இடம் பெற்றிருந்தன. மேலும் கடந்தாண்டு ரஷ்யாவிடம் டிரோன்கள், ஏவுகணைகள் வழங்க முடிவு எடுக்கப்பட்ட உயர்நிலைக் குழுவில் முகமது மொக்பரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement