For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட IPL டிக்கெட்டுகள்?… சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

06:53 AM Mar 19, 2024 IST | 1newsnationuser3
கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட ipl டிக்கெட்டுகள் … சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்
Advertisement

IPL : முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.

Advertisement

நடப்பு ஆண்டின் ஐபிஎல் போட்டி, வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெறவுள்ளது. கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையை தடுப்பதற்காக இந்தாண்டு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை நடைபெறும் என, ஐபிஎஸ் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி, ஆயிரத்து 700 ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை டிக்கெட் கட்டணமாக நிர்ணையிக்கப்பட்டு, பேடிஎம் மற்றும் இன்சைடர் தளத்தில் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, சென்னையில் நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கிய நிலையில், சிறிது நேரத்தில் பேடிஎம் தளத்தில் கோளாறு ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டது.

பின்னர் மீண்டும் விற்பனை தொடங்கியபோது, டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டதால், வெகுநேரம் முன்பதிவு செய்ய காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதிருப்தியடைந்த ரசிகர்கள், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக குற்றம்சாட்டினர். அதேநேரம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிக்கெட் விற்பனை தளத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் paytm அறிக்கை வெளியிட்டுள்ளது

Readmore: தேர்தல் நேரத்தில் இது போன்ற செய்தி பதிவு செய்தால் சைபர் கிரைம் நடவடிக்கை…! காவல்துறை எச்சரிக்கை…!

Tags :
Advertisement