For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2024!… தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இதோ!

08:37 AM Nov 27, 2023 IST | 1newsnationuser3
ஐபிஎல் 2024 … தக்கவைக்கப்பட்ட  விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இதோ
Advertisement

ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம், வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. அதற்கான கடைசி நாளான நேற்று மாலை 10 அணிகளும் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த அதிகாரப்பூர்வ பட்டியலில் விடுவிக்கப்பட்ட வீரர்கள், டிசம்பர் 19 இல் மினி ஏலத்தில் மற்ற அணிகளால் வாங்கப்படுவார்கள். தக்கவைக்கபட்ட வீரர்கள், அதே அணியில் தொடர்வார்கள்.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ் தோனி (C) (wk), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, சிவம் தூபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷக்யா ரஹானே, மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், அம்பதி ராயுடு, சிசண்டா மகலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஃபாஃப் டு பிளெசிஸ் (c), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டகர், வைஷாக் விஜய் குமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். விடுவித்த வீரர்கள், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஃபின் ஆலன், ஜோஷ் ஹேசில்வுட், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ் ஆகியோர் அடங்குவர்.

மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா (c), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், என். திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தக்கவைப்பு. விடுவித்த வீரர்கள்: முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் யாஷ் தயாள், கே.எஸ். பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்ஜாரி ஜோசப், தசுன் ஷனகா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கேப்டன் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் தக்கவைத்துள்ளது. அவர் மும்பை இந்தியன்ஸுக்கு திரும்புவது குறித்த பரவிய தகவல் உண்மையில்லை என அறிவிப்பு. ஹர்திக் பாண்டியா (c), டேவிட் மில்லர், ஷுப்மான் கில், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி. சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாடியா, முகமது ஷமி, நூர் அகமது, ஆர்.கிஷோர், ரஷித் கான், ஜோஷ்வா லிட்டில், மோஹித் ஷர்மா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கேஎல் ராகுல் (c), குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங், பிரேராக் மங்கட், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, மார்க் வூட், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தக்கவைப்பு. ஜெய்தேவ் உனத்கட், டேனியல் சாம்ஸ், மன்னன் வோஹ்ரா, ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, அர்பித் குலேரியா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், கருண் நாயர் ஆகியோர் விடுவிப்பு.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம் (c), மார்கோ ஜான்சன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்விர் சிங், ஹென்ரிச் கிளாசென், புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், டி நடராஜன், அன்மோல்பிரீத் சிங், மயங்க் மார்கண்டே, உபேந்திர சிங் யாதவ், உம்ம்பன் சிங் யாதவ், மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஷாபாஸ் அகமது ஆகியோர் தக்கவைப்பு. விடுவித்த வீரர்கள் ஹாரி புரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகேல் ஹொசைன், அடில் ரஷித் அடங்குவர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஜான்சன் சார்லஸ் ஆகியோர் விடுவிப்பு.

பானுகா ராஜபக்சே, மோஹித் ரதீ, பால்தேஜ் தண்டா, ராஜ் அங்கத் பாவா, ஷாருக் கான் ஆகியோரை பஞ்சாப் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது. ஷிகர் தவான் (c), மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங் (வாரம்), ஜிதேஷ் ஷர்மா (wk), சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம் கர்ரன், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் , ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங் ஆகியோர் தக்கவைப்பு.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் (C) (wk), ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் , ஆடம் ஜம்பா, அவேஷ் கான் ஆகியோர் தக்கவைப்பு. விடுவித்த வீரர்கள்: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரிஷப் பந்த் (wk), பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஆஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி என்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ்ம், இஷாந்த் சர்மா, யாஷ் துல், முகேஷ் குமார்.

Tags :
Advertisement