நீங்க மாதவிடாய் நேரத்தில வரும் வலிக்கு மாத்திரை எடுத்துப்பீங்களா.? அப்போ கண்டிப்பா இத படிங்க.!
ஒருவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கிறது. சில நேரங்களில் உடல் வலி மற்றும் அதிகப்படியான வலியை குணப்படுத்துவதற்கு வழி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறோம். சில நேரங்களில் இந்த மருந்துகளில் இருக்கும் எதிர் விளைவுகள் காரணமாக நமக்கு வேறொரு நோய் அல்லது பாதிப்பு ஏற்படலாம்.
இதேபோன்று பெண்கள் மாதவிடாய் வலி சுழற்சியின் போது ஏற்படும் வலியை கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் மெஃப்டல் என்ற மாத்திரையை அடிக்கடி பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருந்தியல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இந்த மருந்தினை தொடர்ந்து பயன்படுத்துவதால் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அந்த நிறுவனம் எச்சரித்து இருக்கிறது.
இந்தியாவில் மருந்துகளை கண்காணித்து தகவல்களை சேகரிக்கும் இந்திய பார்மக்கோ விஜிலன்ஸ் என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறது. இந்த மருந்தை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு எதிர் விளைவுகள் ஏற்படுவதாக அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியில் நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே இந்த மருந்தினை மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய மருந்தியல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .