முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!! இனி தங்கப் பத்திர திட்டம் கிடையாது..!! மத்திய அரசு திடீர் முடிவு..!!

The gold bond scheme, which has attracted many people to invest in gold, has been announced to be discontinued from next year.
10:56 AM Dec 12, 2024 IST | Chella
Advertisement

தங்க முதலீட்டில் பலராலும் ஈர்க்கப்பட்ட திட்டம் தங்கப் பத்திர திட்டம் ஆகும். இத்திட்டம் அடுத்தாண்டு முதல் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்தியர்களை பொறுத்தவரை சேமிப்பு என்றால் தங்கத்தில் முதலீடு செய்வது தான். நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்குவதை எப்போதுமே பாதுகாப்பாக கருதுகின்றனர். அந்த வகையில், Gold Bond என்ற தங்கப்பத்திர திட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதில், இதில் முதலீடு செய்து கொள்ளலாம்.

அதன்படி, தங்க நகைகளை வாங்கி வைப்பதையும் தாண்டி டிஜிட்டல் முறையில் பத்திரமாக வாங்கி வைப்பது பாதுகாப்பானதாக பார்க்கப்பட்டது. தங்கப்பத்திரத்தின் மெச்சூரிட்டி பீரியட் முடிந்த பிறகு தங்க விலையை ஆண்டுதோறும் சேரும் வட்டியோடு சேர்த்து பயனாளர்களுக்கு திருப்பி தர வேண்டும். ஆரம்பத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை தீர்க்கவும், அதிகப்படியாக தங்க இறக்குமதியை தடுக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், நாளடைவில் தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால், தங்கப் பத்திரத்தால் அரசுக்கு வரக்கூடிய வருமானத்தையும் விட திருப்பிக் கொடுக்கும் செலவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மத்திய அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தங்கப் பத்திர திட்டம் அடுத்தாண்டு முதல் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : ஒரே நேரத்தில் கணவனும், கள்ளக்காதலனும்..!! வலி தாங்க முடியல..!! விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!!

Tags :
தங்க நகைதங்கப் பத்திரம்தங்கம்மத்திய அரசுமுதலீடுரிசர்வ் வங்கி
Advertisement
Next Article