இன்வெர்ட்டர் ஏசி, நான் இன்வெர்ட்டர் ஏசி..!! எது சிறந்தது..? எப்படி பயன்படுத்தினால் கரண்ட் பில் வராது..?
இன்வெர்ட்டர் ஏசிக்கும் நான் இன்வெர்ட்டர் ஏசிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. சீலிங் பேன், டேபிள் பேன் ஓடிக் கொண்டிருந்தாலும் காற்று பற்றவே இல்லை என்பதுதான் பல மக்களின் புலம்பலாக இருக்கிறது. ஏசி இருந்தாலும் கரண்ட் பில் அதிகரிக்கும் அச்சம் இருக்கிறது. இப்போதாவது ஏசியில் நாம் வெக்கையை சமாளிக்கிறோம். அந்த காலத்தில் ஏசியாவது ஒன்னாவது! எதுவும் கிடையாது! வீடுகள் தோறும் மரம் வளர்ப்பார்கள். அதிலும் வேப்ப மரமும் புங்கை மரமும் கட்டாயம் வளர்ப்பார்கள்.
இந்த மரங்களுக்கு கீழே கீற்றுக் கட்டிலை போட்டுக் கொண்டு உட்கார்வதோ, படுப்பதோ சொர்க்கமாக இருக்கும். ஆனால், இப்போதும் சில கிராமங்கள் மட்டுமில்லை நகர்ப்புறங்களில் ஏசியை பயன்படுத்தாமல் முடிந்தவரை இயற்கை காற்றை சுவாசிக்கிறார்கள். அந்த வகையில், ஏசி இயந்திரத்தை கூட இன்ஸ்டால்மென்ட்களில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், மின்சார கட்டணத்தை செலுத்துவதுதான் மிகப் பெரிய கஷ்டமாக இருக்கிறது. இதற்கு அந்த வெக்கையே எவ்வளவோ தேவலாம் என்ற நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் என்னதான் ஏசியை ஆப் செய்து ஆன் செய்தபடியே இருந்தாலும் கரண்ட் பில் கையை கடிக்கத்தான் செய்கிறது.
ஏசியில் டெம்பரேச்சர் 16, 17 உள்ளிட்டவைகளில் வைத்துவிட்டால் கரண்ட்பில் எகிறும். இதனால் 24, 25 டிகிரியில் temperature வைத்துக் கொண்டால் புழுக்கமாக இருக்காது. கரண்ட் பில்லும் மிச்சமாகும். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும். அது போல் ஸ்லீப் மோட் இருக்கும் ஏசியை வாங்கினாலும் அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆப் செய்வது என்ற ஆப்ஷனை செட் செய்துவிட்டாலும் கரண்ட் பில் ஏறாது. இதனால் 36% மின்சார கட்டணம் குறையும்.
இன்வெர்ட்டர் ஏசி குறித்து மக்களுக்கு புரிதல் இல்லாத நிலை உள்ளது. இன்வெர்ட்டர் என்றால் கரண்ட் இல்லாத நேரங்களில் சேமித்து வைத்த கரண்ட் டை வைத்து ஃபேன், லைட் ஆகியவற்றை இயக்கிக் கொள்ளலாம். அதேபோல், இன்வெர்ட்டர் ஏசி என்றால் கரண்ட் இல்லாத நேரங்களிலும் ஏசியை இயக்கலாம் என மக்கள் தவறாக நினைக்கிறார்கள். அதாவது சாதாரண ஏசிகளில் Alternate Current AC பயன்படுத்தப்படுகிறது. இதில் கூலிங் ஃபேனின் ஸ்பீடை உள்ளுக்குள்ளேயே குறைக்காது. இதனால், எப்போதும் ஏசி ஒரே ஸ்பீடில் ஓடுவதால் அதிக அளவு கரண்ட் பில் இழுக்கும்.
ஆனால் இன்வெர்ட்டர் ஏசி அப்படி இல்லை. Direct Current (DC) பயன்படுத்தப்படுகிறது. இதில் புல்லிங் திறன் அதிகமாக இருக்கும். இன்வெர்ட்டர் ஏசியில் கம்ப்ரெஸ்ஸரின் ஸ்பீடு மாறுபட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், இன்வெர்ட்டர் ஏசி கம்ப்ரெஸரில் ஃபிக்ஸடு ஸ்பீடு இருக்கும். ஃப்க்ஸடு கம்ப்ரச்சரை விட variable speed compressorரே சிறந்தது. வேரியபிள் கம்ப்ரசரில் குறைந்த அளவு சப்தம் கேட்கும். இன்வெர்ட்டர் ஏசியானது அறையின் வெப்பநிலைக்கு ஏற்க கம்ப்ரச்சரின் மோட்டர் ஸ்பீடை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் திறனுள்ளது.
இன்வெர்ட்டர் ஏசிக்களில் கூலிங்கிற்காக ஆர் 32 என்பது பயன்படுத்தப்படுகிறது. இது நல்ல கூலிங் திறனை கொடுக்கும். சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை உமிழும். ஆனால், நான் இன்வெர்ட்டர் ஏசியில் பயன்படுத்தப்படும் கூலிங் ஏஜென்ட் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனங்களை உமிழும். ஏசி கரண்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக டிசி கரென்ட் பயன்படுத்தப்படுவதால் அதற்கு இன்வெர்ட்டர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Read More : ’மீண்டும் தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வரும்’..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி..!!