மன்னரின் மகனுடன் உறவு.. ஆட்சிக்காக சொந்த குழந்தையை கொன்ற பெண்.. உலகின் இரக்கமற்ற கொடூர பேரரசி..!
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் சீனாவை ஆட்சி செய்த ஒரே பெண்மணி என்ற பெருமைக்குரியவர், வூ ஸீஷென் Wu Zetian (624-705). இவர் சீன வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய ராணியாக இருந்தார். அழகு, அரசியல் புத்திசாலித்தனம், விடாமுயற்சி ஆகியவற்றால் பிரபலமான இவர், சூழ்ச்சி செய்பவர், இரக்கமற்றவர் மற்றும் கொலைகாரர் என்ற பெயர்களையும் பெற்றார். இந்த பேரரசியின் ஆதிக்கமும் ஆட்சியும் இரத்தத்திலும் பயங்கரத்திலும் மூழ்கியிருந்தன, இருப்பினும் அவர் மிகவும் பிரபலமாக இருந்தார்.
பேரரசி வூ என்று அழைக்கப்படும் இவர் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு அசாதாரண தலைவராகவும் பெண்ணாகவும் இருந்தார். அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
பேரரசரின் ஆசைநாயகி
வூ ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை அவரை நன்றாக படிக்க வைத்ததுடன் அரசாங்க விவகாரங்கள், எழுத்து, இலக்கியம் மற்றும் இசை பற்றி படிக்கவும் கற்றுக்கொள்ளவும் ஊக்குவித்தார். இதனால் சிறு வயதிலேயே புத்திசாலியாக இருந்தார் வூ.
14 வயதில், பேரரசர் தைசோங்கின் ஆசை நாயகியாக அவர் அழைத்து செல்லப்பட்டார். அரண்மனையின் சலவை கூடத்தில் வாழ்க்கையை தொடங்கிய வூ தனது அழகு மற்றும் புத்தசாலித்தனத்தின் மூலம் விரைவிலேயே பேரரசரின் செயலாளராக மாறினார்.
பேரரசரின் மனைவிகளின் தரவரிசையில் வூ-விற்கு 5வது தரவரிசையில் உள்ள கெய்ரன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஒரு துணைவியாக, அவள் பேரரசரின் செயலாளராகப் பணியாற்றுவது, இசை வாசிப்பது மற்றும் கவிதை வாசிப்பது ஆகியவற்றுடன் பேரரசருடன் பாலியல் உறவும் வைத்திருந்தார்.
பேரரசரின் மகனுடன் உறவு
பேரரசர் தைசோங் உயிருடன் இருந்தபோது, வூ தனது இளைய மகன் லீ சூ -வுடன் உறவு கொண்டிருந்தார். 649 இல் தைசோங் இறந்தபோது, அவருக்குப் பிறகு லீ பேரரசராக பதவியேற்றார்.
பேரரசரின் மரணத்திற்குப் பிறகு வூவும் மற்ற துணைவியர்களும் தலைகளை மொட்டையடித்து, ஒரு துறவி கோவிலில் அடைத்து வைக்கப்பட்டு, கற்புடன் தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே பொதுவான விதியாக இருந்தது.
ஆனால், லீ ஷி பேரரசரானவுடன், வூவை மீண்டும் அரசவைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஒரு மனைவி மற்றும் பிற துணைவியர்கள் இருந்தபோதிலும் வூ-விற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
650களின் முற்பகுதியில், வூ பேரரசர் லீஷிங்கின் அதிகாரப்பூர்வ துணைவியாக மாறினார். மேலும் இரண்டாம் தரத்தின் 9 துணைவிகளில் மிக உயர்ந்த பதவியான ஜாவோய் என்ற பட்டத்தை பெற்றார்..
தனது சொந்தக் குழந்தையை கொலை செய்த வூ
654 இல், வூ ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். எனினும் அவரின் குழந்தை சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. பேரரசர் முதல் மனைவியான பேரரசி வாங் தனது குழந்தையை கொலை செய்ததாக வூ குற்றம் சாட்டினார்.
வாங் பொறாமையால் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றதாக பேரரசர் நம்பினார், இறுதியில் வாங் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 655-இல், புதிய பேரரசின் மனைவியாக வூ மாறினார். எனினும் பேரரசி வாங்கை அதிகாரப் போராட்டத்தில் சிக்க வைக்க தனது சொந்தக் குழந்தையை வூ கொன்றிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்..
683 இல் பேரரசர் லீ ஷிங்கின் மரணத்திற்குப் பிறகு, வூ பேரரசியாக மாறினார். மேலும் அவரது மகன் லி சே பேரரசர் ஜாங்சோங்காக அரியணை ஏறினார். புதிய பேரரசர் உடனடியாக தனது தாயாருக்கு கீழ்படியவில்லை. எனவே பேரரசி வூ மற்றும் பேரரசர் மற்றும் அவரின் கூட்டாளிகளை பதவி நீக்கம் செய்து நாடுகடத்தினர்.
வூ தனது இளைய மகன் லி டானை புதிய பேரரசராக நியமித்தார். ஆனால் அவர் ஒரு கைதி போலவே இருந்தார். அவர் எந்த அரசு விழாக்களிலும் தோன்றவில்லை, ஒருபோதும் அரச குடியிருப்புகளுக்கு மாற்றப்படவில்லை.
690 இல், வூ தனது மகனை பதவி நீக்கம் செய்து தன்னை பேரரரசி என்று அறிவித்தார். தனது மகனை அரியணையை விட்டுக்கொடுக்க கட்டாயப்படுத்தியதன் மூலம், பேரரசி ரெஜினன்ட் வூ, அதாவது புதிய "சோவ் வம்சத்தின்" ஆட்சியாளராக தன்னை அறிவித்தார்.
பணக்கார பேரரசி
சீனா மட்டுமின்றி உலகின் பணக்கார பேரரசியாகவும் வூ அறியப்படுகிறார். வூ-வின் சொத்து மதிப்பு சுமார் 16 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பை விட அதிகமாகும், இது தற்போது சுமார் 110 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அவரது சொத்து மதிப்பு எலோன் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற நவீன கால கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பையும் விட அதிகமாகும்..
இரக்கமற்ற கொடூர பேரரசி
வூ தன் எதிரிகள் பலரை கொடூரமாக கொலை செய்தார். அவர்களை கொல்ல மரணதண்டனை, தற்கொலை, கொலை என பல முறைகளை பேரரசி வூ கையாண்டார். வெளிநபர்கள் மட்டுமின்றி, தனது சொந்த குடும்ப நபர்களையும் தொடர்ச்சியாக கொன்று குவித்தார். தன் பேரன் மற்றும் பேத்தி தற்கொலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தனது குழந்தையைக் கொன்றதாக கூறி பேரரசி வாங் பதவி இறக்கம் செய்யப்பட்டபோது, வூ வாங்கின் கைகளையும் கால்களையும் வெட்டி, அவளது சிதைந்த உடலை மது தொட்டியில் வீச உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அவரின் ஆட்சிக் காலத்தில், பல்வேறு பிரபுத்துவ குடும்பங்கள், அறிஞர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டனர் அல்லது தற்கொலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டனர், மேலும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.
690களின் பிற்பகுதியில், தனது பேரரசில் கவனம் செலுத்தியதை விட, தன் இளம் காதலர்களுடன் அதிக நேரத்தை வூ செலவிட்டார். இதுவே அவரின் சாம்ராஜ்யம் வீழ்வதற்கு காரணமாக அமைந்தது.
தனக்குப் பிடித்த இரண்டு இளம் சகோதரர்களான ஜாங் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஒரு ஜோடி இளம் சகோதரர்களுடனான உறவு வூ மீதான களங்கத்தை அதிகரிக்க செய்தது. மேலும் அவர் உடலுறவு எண்ணங்களை தூண்டும் பானங்களுக்கு அடிமையானார்.
704 ஆம் ஆண்டில், நீதிமன்ற அதிகாரிகள் அவளுடைய நடத்தையை இனி பொறுத்துக்கொள்ள முடியாமல் ஜாங் சகோதரர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டனர்.
ஒருகட்டத்தில் வூ-விற்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில், நாடுகடத்தப்பட்ட தனது மகனும் முன்னாள் பேரரசருமான ஜாங்சோங் மற்றும் அவரது மனைவி வெய் ஆகியோருக்கு ஆதரவாக அவருக்கு அரியணையைத் துறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும் ஒரு வருடம் கழித்து வூ இறந்தார். ஆனால் சீனாவின் ஒரே பேரரசியான இவரின் கொடூர வரலாறு இன்றும் நிலைத்திருக்கிறது.
Read More : ஹிட்லரிடம் இருந்து ஆடம்பர பரிசு.. 350 மனைவிகளுடன் வாழ்ந்த இந்த இந்திய மன்னர் பற்றி தெரியுமா..?