’சுகன்யா சம்ரித்தி யோஜனா’ திட்டம்..!! வட்டி எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!
தபால் நிலையங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் உத்தரவாத வருமானம் பெற முடியும். அந்த வகையில், மூத்த குடிமக்கள் முதலீடு செய்வதற்கான சூப்பர் திட்டம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இத்திட்டத்தின் பெயர் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY). இந்தத் திட்டத்திற்கு 8.20 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிவில் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
குறைந்தபட்சமாக ஒருமுறை முதலீடு 1000 ரூபாய் ஆகும். அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில், ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். ஒருவர் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், அவருக்கு காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்தப்படும். ஒருவர் SCSS கணக்கை முன்கூட்டியே மூடலாம் அல்லது முதிர்வு தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.2,46,000 பெற வேண்டுமென்றால், அவர் இந்த திட்டத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 8.2% வட்டி விகிதத்தில், ஒரு காலாண்டில் ரூ.61,500 காலாண்டு வட்டி தொகை கிடைக்கும். இதன் மூலம் ஒரு ஆண்டில், அவர் ரூ.2,46,000 பெறுவார். அந்த நபர் 5 ஆண்டுகள் முழுவதுமாக இந்த திட்டத்தை தொடர்ந்தால், அவர்களின் ஆரம்ப முதலீட்டான ரூ.30 லட்சத்தில் ரூ.12 லட்சம் வருமானம் கிடைக்கும்.