தீவிரமடையும் கொரோனா..!! மூத்த குடிமக்கள், இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய உத்தரவு..!!
கர்நாடாகவில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடாகவில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தினார். மேலும், கொரோனா குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். அரசு மருத்துவமனைகளை தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். கேரளாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பகுதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும். சுவாசக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.