முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தீவிரமடைந்த வாக்கிங் நிமோனியா பரவல்!. பள்ளி குழந்தைகளின் ரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடிவு!. கேரளா-தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!.

Intensified spread of walking pneumonia!. Decision to test blood samples of school children!. Intensive surveillance on Kerala-Tamil Nadu border!.
05:55 AM Jan 24, 2025 IST | Kokila
Advertisement

Walking pneumonia: கேரளாவில் குழந்தைகளின் நுரையீரலை பாதிக்கும், 'வாக்கிங் நிமோனியா' தொற்று அதிகளவில் பரவிவருவதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். குளிர்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் என்றாலும், வழக்கத்தைவிட அதிகமான குழந்தைகள் சிகிச்சைக்கு வந்ததை அடுத்து, அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில், அந்த குழந்தை களுக்கு 'மைக்கோபிளாஸ்மா' எனும் பாக்டீரியாவால் நிமோனியா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது, 'வாக்கிங் நிமோனியா' என, அழைக்கப்படுகிறது. வழக்கமாக, இந்த பாக்டீரியாக்கள், 5 முதல் 17 வயது வரை உள்ளவர்களை தாக்கும் நிலையில், இந்த முறை 5 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளிடையே இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் பெரியவர்களுக்கும் இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல், தோல்களில் வெடிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா, பெரும்பாலானோருக்கு நுரையீரல் தொற்றை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற அறிகுறிகள் ஐந்து நாட்களுக்கு மேல் இருந்தால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக செல்லுமாறு கேரள சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் எச்சில் துளிகள் மற்றும் மூச்சுக்காற்று வாயிலாக மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா பரவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ள கேரள அரசு, முதற்கட்டமாக ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் ரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடிவு செய்துள்ளது.

Readmore: காஷ்மீர்| 17 பேரின் மர்ம மரண விவகாரம்!. வெளியான அதிர்ச்சி காரணம்!. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம்!

Tags :
Keralapreadingtest blood sampleswalking pneumonia
Advertisement
Next Article