விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எஃப்-15..!! நேரில் பார்க்க வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..? தேதி, நேரம் என்ன..?
GSLV F -15 ராக்கெட் வரும் 29ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் GSLV F -15 ராக்கெட் ஜனவரி 29ஆம் தேதி காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இஸ்ரோவின் 94வது விண்கலமாகும்.
ராக்கெட் விண்ணில் ஏவுதலை நேரில் காண விரும்புவோர், முன்பதிவு செய்யலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. அதேபோல், https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளம் மூலம் நேரம், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்போர், ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம், அரசு வழங்கிய ஏதேனும் ஐடி, செல்போன் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஐடியை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் நிறுவன முன்பதிவுக்கு நிறுவனத் தலைவரிடமிருந்து கையொப்பம் மற்றும் முத்திரையுடன் கூடிய கடிதம் கட்டாயம் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
Read More : ”எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டியா”..? மனைவியுடன் உல்லாசமாக இருந்த கந்து வட்டிக்காரர் படுகொலை..!!