For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு...! 9 மணிக்கு பின் வந்தால் அனுமதி கிடையாது...! முழு விவரம்

Integrated Technical Services Examination
06:28 AM Oct 18, 2024 IST | Vignesh
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு     9 மணிக்கு பின் வந்தால் அனுமதி கிடையாது     முழு விவரம்
Advertisement

ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) 23.10.2024 வரை (19.10.2024 மற்றும் 20.10.2024 ) தவிர (Computer Based Test) நடைபெறவுள்ள தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

விண்ணப்பதாரர்கள், முற்பகல் தேர்விற்கு காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள், பிற்பகல் தேர்விற்கு மதியம் 1.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். மதியம் 2.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், 5.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு(PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண்(PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு வர வேண்டும்.

தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம்(Electronic Watches). 4 (Bluethooth) போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் சிறப்பு பேருந்து வசதிகள் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement