For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காரில் இருந்தபடி ஆய்வு..? கோபத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்..!! பெரும் பரபரப்பு..!!

The incident of the public throwing mud at Minister Ponmudi, who went to inspect the flood damage, has caused a stir.
01:36 PM Dec 03, 2024 IST | Chella
காரில் இருந்தபடி ஆய்வு    கோபத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்     பெரும் பரபரப்பு
Advertisement

வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Advertisement

ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. அதுவும், விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை வெளுத்து வாங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து இரண்டு நாட்களாகியும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியவில்லை.

இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருவேல்பட்டு பகுதியில் காரில் இருந்தபடியே அமைச்சர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே, வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் ஆவேசமாக இருந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சேறு வீசப்பட்டதால், அவர்கள் உடனே போலீசார் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Read More : ”என்கூட எல்லாம் பண்ணிட்டு வேற ஒரு பொண்ணுக்கூட எப்படி”..? 2 முறை அபார்ஷன்..!! கதிகலங்கி போன கல்யாண மண்டபம்..!!

Tags :
Advertisement