HIV தொற்றுக்கு புதிய மருந்து வந்தாச்சாம்..!! - ஆப்பிரிக்கா பல்கலைக்கழகம் சாதனை
தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எச்.ஐ.வி. தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 100 சதவீத செயல்திறனைக் காட்டியுள்ளது.
எயிட்ஸை உண்டாக்கும் எச்.ஐ.வி. வைரஸ் மனித உடலின் T-ஹெல்பர் செல்களை தாக்குகிறது. T-செல்கள் என்பது எச்.ஐ.வி. உருவாக்கும் ஒரு வகை செல். எச்.ஐ.வி. தொற்றும் செல்கள் அனைத்தும் அவற்றின் தாக்கத்தால் அழிக்கப்பட்டுவிடுகிறது. அழிக்கப்பட்டபின் வெளியேறும் செல்கள் அடுத்து நல்ல நிலையில் இருக்கும் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றது. வெகு சீக்கிராமாக நடக்கும் இந்த ப்ராஸஸ் மொத்த செல்களையும் அழித்து விடுகிறது.
இத்தகைய ஆபத்தான உயிர்கொல்லி நோய்க்கு மருந்துகள் வந்துவிட்டது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்... உண்மைதான். எச்.ஐ.வி.யை முழுவதுமாக குணப்படுத்த நம் ஆராய்ச்சியாளர்கள் முழு முயற்சியில் இறங்கி விட்டனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எச்.ஐ.வி. தடுப்பு மருந்து
கண்டுபிடிப்புக்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 100 சதவீத செயல்திறனைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
ஆண்டுக்கு 2 முறை (6 மாதத்துக்கு ஒன்று) ஊசி மூலமாக செலுத்தப்படும் இந்த மருந்து மூலமாக எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரித்து விரைவில் குணமடையும் சாத்திய கூறுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. எச்.ஐ.வி.யால் இளம்பருவ பெண்களை கொண்டு நடத்தப்பட்ட 3 கட்ட
சோதனையின் மூலம் நிருபணமாகி உள்ளதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னரே சோதனையின் வெற்றியை பொறுத்து இந்த மருந்து விற்பனை சந்தைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு இன்னும் சோதனை நடத்தப்படவில்லை.