மழை சீசன் தொடங்கியாச்சு.. ஃப்ளூ காய்ச்சல் பரவலை தடுக்க தடுப்பூசி அவசியம்..!! - மருத்துவர்கள் அறிவுறுத்தல்
இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் சுவாச மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸால் வருகிறது. பெரும்பாலும் தானாகவே குணமடையும் நிலையில் சிலருக்கு இந்த காய்ச்சல் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். காய்ச்சல் தடுப்பூசிகள் தான் Influenza Vaccines அல்லது flu shots என்று அழைக்கப்படுகின்றன. இது நான்கு இன்ஃப்ளூயஸா வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பை பருவகாலங்களில் வழங்குகிறது.
அறிகுறிகள் : இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் சிலருக்கு தாமாகவே குணமானாலும் கூட தீவிர நிலையில் பாக்டீரியா, நிமோனியா, காது நோய்த்தொற்றுகள், சைனஸ் தொற்றுகள், நீரிழப்பு மற்றும் இதய செயலிழப்பு மோசமடைதல், ஆஸ்துமா, நீரிழிவு நிலையில் தீவிர பாதிப்பு உண்டு செய்யலாம். சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற வயிற்று அறிகுறிகளும் உண்டாகலாம். குழந்தைகளிடம் இந்த அறிகுறி பொதுவானது. அடிப்படை மருத்துவ நிலைமைகள் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சிலர் காய்ச்சலினால் ஏற்படும் சிக்கலின் ஆபத்தில் இருப்பவர்கள் . இவர்கள் சிக்கலை தடுக்க தடுப்பூசி எடுத்துகொள்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தடுப்பூசி எப்போது போட வேண்டும்?
காய்ச்சல் பருவம் மற்றும் அதன் காலம் மற்றும் தீவிரத்தன்மையிலிருந்து மாறுபடும் என்பதால் தடுப்பூசி கிடைத்தவுடன் மற்றும் முழு ஃப்ளூ காய்ச்சல் நிலைகளில் தடுப்பூசி டோஸ் செல்லலாம். இதை ஒவ்வொரு வருடமும் போட வேண்டும். ஏனெனில் காய்ச்சல் வைரஸ்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. பொதுவாக ஒவ்வொரு காய்ச்சல் பருவத்திலும் புதிய இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவுகிறது.
அதோடு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் புழக்கத்தில் இருக்கும் வைரஸ்கள் அடையாளம் கண்டு சிறந்த பாதுகாப்பை வழங்கும் வகையில் தடுப்பூசி ஃபார்முலாவில் சேர்க்கிறது. தடுப்பூசி போடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகி உங்கள் உடல் மருத்துவ நிலை, வயது, ஒவ்வாமை குறித்து ஆலோசித்து அவரது பரிந்துரையின் பெயரில் எடுத்துகொள்வது பாதுகாப்பானது.
Read more ; நேபாளத்தை உலுக்கிய வெள்ளம், நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு..!! தற்போதைய நிலவரம் என்ன?