For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பத்தாம் வகுப்பு போதும்.. பாதுகாப்பு படையில் வேலை.. 69 ஆயிரம் சம்பளம்..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Indo-Tibetan Border Security Force has released a notification to fill up 819 constable posts. Here are the details including who can apply for these posts and how to apply.
11:05 AM Sep 02, 2024 IST | Mari Thangam
பத்தாம் வகுப்பு போதும்   பாதுகாப்பு படையில் வேலை   69 ஆயிரம் சம்பளம்     ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Advertisement

இந்தோ - திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் 819 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Advertisement

இந்தோ - திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தோ திபெத் பாதுகாப்பு படை பிரிவில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 819 - கான்ஸ்டபிள் (kitchen services) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்:

ஆண்கள் - 697,

பெண்கள் - 122 என மொத்தம் 819 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித்தகுதி:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் உணவு தயாரிப்பு அல்லது சமையலறை படிப்பு (food production or kitchen course) முடித்து இருப்பது அவசியம்

வயது வரம்பு:

18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையை பொறுத்தவரை உடல் திறன் சோதனை (PET), உடல் தகுதி தேர்வு (PST), எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம் எவ்வளவு?

தற்காலிக அடிப்படையில் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளது. பணி நிரந்தரத்திற்கு பிறகு சம்பளமாக ரூ.27,700 - 69,100-வரை சம்பளமாக வழங்கப்படும். காலிப்பணியிடங்கள் குறித்த எண்ணிக்கை தற்காலிகமானது. காலிப்பணியிடங்கள் கூட்டவோ.. குறைக்கவோ படலாம்

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் இன்று (செப்.2) முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 1 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. தேர்வுக்க்கு விண்ணப்பிக்க - https://recruitment.itbpolice.nic.in/rect/index.ph என்ற அதிகார பூர்வ தளத்தை பார்வையிடவும்.

Read more ; தவறான விளம்பரம்… பிரபல ஐ.ஏ.எஸ் அகாடமிக்கு ரூ.5 லட்சம் அபராதம்…!

Tags :
Advertisement