முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’அலட்சியம், பேராசையே வெள்ளத்துக்கு காரணம்’..!! ’10 ஆண்டுகளாக இதே நிலைதான்’..!! சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்..!!

01:53 PM Dec 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது பெய்த மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இந்த வெள்ளத்தினால் ஏராளமான மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிப்போயினர். பொதுமக்களைப் போல் சினிமா பிரபலங்களும் இந்த பெருவெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

Advertisement

நடிகர் விஷால் தன்னுடைய வீட்டில் தண்ணீர் தேங்கி உள்ளதாக குறிப்பிட்டு மேயர் பிரியாவை விமர்சித்து இருந்தார். இதேபோல் நடிகர் விஷ்ணு விஷால், அமீர் கான் ஆகியோரும் வெள்ளத்தில் சிக்கினர். பின்னர் தகவலறிந்த மீட்புப்படை வீரர்கள் அவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் தனது வீட்டுக்கு வரவழைத்து அடைக்கலம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார் அஜித்குமார்.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன், இந்த வெள்ளத்தால் தன் பகுதி மக்கள் பட்ட கஷ்டங்களை கூறி அரசையும் வெளுத்து வாங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி அது வடிய குறைந்தது ஒரு வாரம் ஆகிறது. எங்கள் பகுதியில் குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தாண்டு ஏற்கனவே அது புதிய உச்சத்தை தொட்டுவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், நாங்கள் வசிக்கும் கொளப்பாக்கம், ஒரு ஏரியோ அல்லது 'தாழ்வான' பகுதியோ அல்ல, சென்னையில் உள்ள மற்ற பகுதிகளை விட எங்களிடம் ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் இருக்கின்றன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவை தான் மழை நீர் மற்றும் கழிவுநீரை ஒரே ஒரு பாசனக் கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது.

அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்புகளை பாதிக்கிறது. இந்த நேரத்தில் ஏதேனும் நோயோ அல்லது மருத்துவ அவசர நிலையோ ஏற்பட்டால் அது மரணத்தில் தான் முடிகிறது. எங்கள் மக்களுக்காக, ஜெனரேட்டர் வசதி உள்பட பிற முக்கியமான தேவைகளுக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் சில மோட்டார் பம்புகள் நிரந்தரமாக உள்ளன.

சென்னை வாசிகளின் தைரியத்துக்கு பாராட்டுகள், நான் எங்கு சென்றாலும் அவர்களிடம் மிகவும் அன்பும், நேர்மறையும் இருக்கிறது. இந்த தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். நியாயமற்ற எதிர்பார்ப்புகள் எனக்கு இல்லை, பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நம்புகிறேன்” என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

Tags :
சந்தோஷ் நாராயணன்சென்னைமிக்ஜாம் புயல்வெள்ளம்
Advertisement
Next Article