இந்தியாவின் புதிய ரெக்கார்ட்!. ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையம்!. 2025 ஏப்ரலில் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்!
Jewar Airport: உத்தர பிரதேசம் ஜெவாரில் கட்டப்பட்டு வரும் ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையம் வரும் ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்த பெரிய விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் பத்தாயிரம் கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த விமான நிலையம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரெக்கார்டை படைத்துள்ளது. Jewar சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமான நிலையம் உத்திர பிரதேச மாநிலமும் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களின் நிலையமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஜெவார் விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது, மீதம் இருக்கும் கட்டுமான பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
நொய்டாவின் ஜெவார் பகுதியில் இந்த விமான நிலையம் அமைந்திருப்பதால் ஜெவார் விமான நிலையம் என்றே அழைக்கப்படுகிறது. இந்த விமான நிலையத்தில் முக்கியமான ஓடுபாதை மற்றும் விமானப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு (ATC) கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன. இந்த விமான நிலையத்தில் ஒரு நாளுக்கு சுமார் 50 விமானங்கள் அனுமதிக்கப்படுகிறது. ரேடார் சர்வீஸ் இருப்பதால் இதன் செயல்பாட்டு திறன் அதிகரிக்கும்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக உருவாக்க்கப்பட்டிருக்கும் நொய்டா ஜெவார் விமான நிலையம், உலகின் நான்காவது பெரிய விமான நிலையமான உள்ளது. இந்த விமான நிலையத்தை 2025 ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 2040 ஆண்டில் இந்த விமானநிலையம் ஆண்டு தோறும் 70 மில்லியன் பயணிகளை கையாளும் திறனை கொண்டிருக்கும்.
Readmore: இனிப்பான செய்தி!. பொங்கலுக்கு ட்ரிபுள் ஜாக்பாட்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 இலவசம்!. என்ன தெரியுமா?