ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு…! ஜெய்ஸ்வால், கில் என களைகட்டும் அணி…
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஜனவரி 18 சனிக்கிழமை மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் அறிவித்தனர்.
ஐசிசி போட்டிக்கான 14 பேர் கொண்ட அணியை அஜித் அகர்கர் தேர்வு செய்துள்ளார். ஐசிசி போட்டிக்கான அணியில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஷுப்மான் கில் துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் பும்ரா, தனது உடல் தகுதியை நிரூபித்த பின்னரே அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரியவரும்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (வி.கே.), அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜஸ்பிரித் பும்ரா((உடற்தகுதிக்கு உட்பட்டது), குல்தீப் யாதவ்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் மீண்டும் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்திய அணியின் முக்கிய ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இடம் பெற, சுழல் ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள். தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று வந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிக்கு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ்.