For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

RRB Recruitment 2024: இந்தியன் ரயில்வேயில் டெக்னீசியன் பணி.! 9,000 காலியிடங்கள்.! விண்ணப்பிப்பது எப்படி.?

09:19 PM Feb 17, 2024 IST | 1newsnationuser7
rrb recruitment 2024  இந்தியன் ரயில்வேயில் டெக்னீசியன் பணி   9 000 காலியிடங்கள்   விண்ணப்பிப்பது எப்படி
Advertisement

உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் ஒன்றான இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,000 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது . இந்த அறிவிப்பின்படி ரயில்வே துறையில் காலியாக உள்ள டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் மற்றும் டெக்னீசியன் கிரேடு 2 சிக்னல் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Advertisement

இந்த அறிவிப்பின்படி டெக்னீசியன் கிரேட் 1 சிக்னல் பணிகளுக்கு 1100 காலியிடங்களும் டெக்னீசியன் கிரேட் 2 பணிகளுக்கு 7900 காலியிடங்களும் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. டெக்னீசியன் கிரேடு 1 பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்ச 36 வயதிற்குள் இருக்க வேண்டும். டெக்னீசியன் கிரேடு 2 பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு மார்ச் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இந்தியன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வேலை வாய்ப்பிற்கான சம்பள விபரங்கள் மற்றும் வேலை தொடர்பான பிற தகவல்கள் மார்ச் 9-ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க SC/ST, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் ₹250 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதர பிரிவினருக்கு ₹500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய https://indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,7,1281 என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

RRB டெக்னீஷியன் ஆட்சேர்ப்பு 2024: விண்ணப்பிப்பது எப்படி

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க RRB அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும் https://www.recruitmentrrb.in

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான லிங்க் கிளிக் செய்யவும்.

முதல் முறை விண்ணப்பிப்பவர்கள் தங்களுக்கான புதிய அக்கவுண்ட்டை ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.

அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்த பிறகு உங்களது பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உங்கள் கணக்கை ஓபன் செய்யவும். ஓபன் செய்து உள்ளே நுழைந்ததும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்கத்திற்கு சென்று சுய விவரங்கள் மற்றும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்யவும். விண்ணப்ப படிவத்தினை நிரப்பிய பின் ஒரு முறை சரிபார்க்கவும்.

இதனைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்களான கல்வி சான்றிதழ் வயது சான்றிதழ் கையொப்பம் ஜாதி சான்றிதழ் இவற்றை ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவும்

விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணங்கள் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட பின்பு ஆன்லைன் பணவரத்தினங்களை பயன்படுத்தி விண்ணப்பித்ததற்கான கட்டணத்தை செலுத்தவும்.

மேற்கூறிய அனைத்து படிநிலைகளையும் வெற்றிகரமாக முடித்த பின் உங்களது தகவல்களை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

English Summary

RRB announces 9.000 vacancies for technician grade postings in Indian railway. Interested candidates can start applying from 9th of march. This post will guide you how to apply for this job..

Tags :
Advertisement