10 ஆம் வகுப்பு போதும்.. இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..
இந்திய அஞ்சல் துறையில், தமிழ்நாட்டில் உள்ள 25 டிரைவர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள மெயில் மோட்டார் சேவைகள் பிரிவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதன் மூலம், திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் நியமனங்கள் நடைபெறும்.
பணியிடங்கள்: 25, சென்னையில் 15, திருச்சி 1, மதுரை 4, கோயம்புத்தூர் 2, சேலம் 3. இந்த பணியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ஓட்டுநர் உரிமம் பெற்ற மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 56 வயது வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குரூப் சி ஊழியர்கள், மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்தப் பணியில் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சம்பளம் : ரூ. 19,900 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இதில் விண்ணப்பிக்க, https://www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தும், The Senior Manager, Mail Motor Service, No. 37, Greams Road, Chennai - 600 006 என்ற முகவரிக்கு தபால் வழியாகவும் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 08.02.2025 விண்ணப்படிவங்கள் சரிபார்க்கப்பட்டு, நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும். இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். மேலும் விவரங்களுக்கு இந்திய தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
Read more : சத்தமே இல்லாமல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகள் இவை தான்..! கவனம்.. பல பிரச்சனைகள் ஏற்படலாம்..