இனி கண்ட மாத்திரை சாப்பிடாதீங்க... எப்பேர்பட்ட சளி, காய்ச்சலும் இதை குடிச்சா சரியாகும்..
குளிர்காலம் என்றாலே சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி விடும். நமது முன்னோர்கள் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில், லேசான தலைவலி வருவதற்கு முன்பே கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.
இதனால் நீங்கள் முடிந்தவரை மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே சளியை குணப்படுத்த முயற்சி செய்வது நல்லது. அந்த வகையில், சளி, இருமல், ஜலதோசத்தை விரட்ட எளிமையான ஒரு வீட்டு வைத்தியத்தை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். வீட்டில் தயாரிக்கப்படும் இந்த கஷாயம், உங்கள் உடம்பில் எப்படிப்பட்ட சளி இருந்தாலும், காய்ச்சலாக இருந்தாலும் அதை முறிக்கும் தன்மை கொண்டது.
இந்த கஷாயம் தயாரிக்கும் முறையை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள். இதற்கு முதலில், 1/2 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் மல்லி தூள், சிறிய துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 1 வெற்றிலை மற்றும் அதன் காம்பு ஆக்கியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி, அதில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால் மிளகையும், இஞ்சியையும் மட்டும் உரலில் ஒன்றும் இரண்டுமாக நச்சு போட்டுக்கொள்ள வேண்டும். வெற்றிலையை சிறு துண்டுகளாக
கிழித்து போட்டுக் கொள்ளவும். இப்போது நாம் வைத்த ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் அளவு சுண்டும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். தண்ணீர் அரை டம்ளர் அளவிற்கு வற்றிய பிறகு, அடுப்பை அனைத்து விட்டு, தண்ணீரை வெதுவெதுப்பாக இருக்கும் போது குடித்து விடுங்கள்.
சுலபமாக தயாரிக்கப்படும் இந்த கசாயம், சளி காய்ச்சலுக்கு நல்ல தீர்வு அளிக்கும்.
Read more: வயசானாலும் முகத்தில் சுருக்கம் இல்லாமல், இளமையா இருக்க வேண்டுமா? அப்போ கண்டிப்பா இதை குடிங்க..