முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்திய அரசியலில் பரபரப்பு!! திடீரென சந்திரபாபு நாயுடுவை சந்தித்த மு.க.ஸ்டாலின்!! மாறுகிறதா கூட்டணி?

05:40 AM Jun 06, 2024 IST | Baskar
Advertisement

ஆந்திராவில் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியாக் கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவில் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்பதை அறிவித்து தெளிவுப்படுத்தினார். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்டனர். இருவரும் தங்களது கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி, இணையமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கேட்டு பாஜகவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினும் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். மேலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிப் பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “டெல்லி விமான நிலையத்தில் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். அவர் மத்திய அரசில் முக்கியப் பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read More: காதலில் விழுந்த சுனைனா! காதலரின் கையை பிடித்துக்கொண்டு நியூ போஸ்ட்!

Tags :
அரசியல்சந்திர பாபுமு.க.ஸ்டாலின்
Advertisement
Next Article