முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Degree படித்தவர்களுக்கு Indian Overseas Bank வேலைவாய்ப்பு.! கடைசி தேதி பிப்.29.! வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.!

09:32 PM Feb 22, 2024 IST | 1newsnationuser7
Advertisement

Infian Overseas Bank: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஈரோடு கிளையில் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணியிடம் காலியாக இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் நிறைந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது .

Advertisement

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் இவர்களது குறைந்தபட்ச வயது வரம்பு 22 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும் இருக்க வேண்டும். எஸ்.சி,எஸ்.டி மற்றும் பி டபிள்யு டி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதில் தளர்வு உண்டு. இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.12,000/- வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் மற்றும் கல்வி சான்றிதழ்களை 20.02.2024 தேதிக்குள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பிராந்திய அலுவலகம்,
12/1 APT சாலை, பார்க் ரோடு-சத்தி ரோடு, ஈரோடு-638003 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிறகு விபரங்களை அறிய https://www.iob.in/ என்ற இணையதளம் முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

English Summary: Indian overseas bank offers office assistant job for degree holder with good salary. Don't miss it.

Read More: எடப்பாடியார் அழைக்கிறார்.! விவசாயிகளுக்காக போராட்ட களத்தில் அதிமுக.! பிப். 29 தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

Tags :
employment newsGood Packagejob offerOffice Assistantதமிழ்நாடு
Advertisement
Next Article