இந்திய கடற்படை ரகசியங்கள் கசிவு!. 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை!
NIA: இந்திய கடற்படை தொடர்பான ரகசிய பாதுகாப்பு தகவல் கசிந்தது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் பாகிஸ்தானிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு வேவு பார்த்ததாக பலர் மீது குற்றம்சாட்டி இதுவரை 3 குற்றப்பத்திரிகைகளை தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 7 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. இந்தியாவில் உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து பணம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. குஜராத், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ தெரிவித்தது.
Readmore: அச்சுறுத்தும் குரங்கு அம்மை!. வைரஸை கண்டறியும் ஆர்.டி.- பி.சி.ஆர். கிட் அறிமுகம்!.