திடீரென ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்..!! என்ன நடக்கிறது..? எதற்காக..?
11:56 AM Jan 17, 2024 IST | 1newsnationuser6
Advertisement
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பனிமூட்டம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று (ஜனவரி 17) காலை வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்ததால் கடும் குளிர் நிலவியது.
Advertisement
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட வேண்டிய 120 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டன. 53 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவதி அடைந்தனர். அதேபோல் டெல்லியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. டெல்லி விமான நிலையத்தில் வழக்கமான நேரத்தை விட, 170-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன.