இந்தியாவில், மனிதர்கள் இந்த இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.! ஏன் தெரியுமா.!?
பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உலகில் பல்வேறு மூலை முடுக்குகளுக்கும் மனிதர்கள் எளிதாக செல்லக்கூடிய நவீன வசதியும் வந்துவிட்டது. அப்படியிருக்க உலகில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே மனிதர்கள் செல்லக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் குறிப்பிட்ட பகுதிக்கு மனிதர்கள் கண்டிப்பாக செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை எந்தெந்த பகுதிகள் என்பதை குறித்து பார்க்கலாம்.
1. இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடசென்டினல் என்ற தீவில் வாழும் பழங்குடியினருக்காக மனிதர்கள் அந்த தீவிற்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. நமக்கு ஏற்படும் சிறிய சளி, காய்ச்சல் கூட அந்த தீவில் உள்ள பழங்குடியினரால் தாக்குப் பிடிக்க முடியாமல் உயிர் பிரிந்துள்ளது. மேலும் அந்த தீவிற்கு செல்ல முயற்சி செய்த பலரையும் அங்கு உள்ளவர்கள் கொன்று விடுகின்றனர்.
2. ராஜஸ்தானில் பாங்கார் கோட்டை என்ற பகுதி உள்ளது. அங்கு பேய் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். மேலும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அப்பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்று தடையும் விதித்திருக்கின்றனர்.
3. அந்தமானில் சென்டினல் தீவு மட்டுமல்லாது மேலும் ஒரு சில தீவுகளின் இயற்கை சூழல் மற்றும் தனித்துவமான உயிரிகளையும் பாதுகாப்பதற்காக மனிதர்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. மேற்கு வங்கத்தில் டாவ் என்ற மலைப்பிரதேசம் உள்ளது. அங்கு அமானுஷ்ய செயல்கள் பல நடந்து வருவதாக கூறி உள்ளூர் மக்கள் அச்சத்தில் அந்த பகுதிக்கு செல்வதில்லை.
5. பாங்காக் ஏரி பிரபலமான சுற்றுலா தளமாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஏரியின் மேற்கு பகுதியில் மனிதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் மேற்கு பகுதி சீனா - இந்தியா எல்லையாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
6. அந்தமானில் உள்ள பாரன் தீவில் உள்ள எரிமலை அடிக்கடி வெடிக்கும் வாய்ப்பு இருப்பதால் அங்கு மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
7. இமாலய மலைப்பகுதியில் ஸ்டாக் காங்கிரி என்ற இடம் உள்ளது. மலை ஏறுபவர்களின் விருப்பமான இடமாக இருந்து வந்தாலும் அந்த பகுதியின் நிலையில்லாத வானிலை, கடினமான நிலப்பரப்பு, பனிப்பாறைகள் குறைந்து வருவது போன்ற காரணங்களினாலும், அங்கு செல்பவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும் இப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.