"இந்தியாவை சீண்டும் மாலத்தீவு.."! அனுமதியின்றி 3 மீன்பிடி படகுகளில் ஏறிய இந்திய கடலோர காவல்படை.! மாலத்தீவு கடும் குற்றச்சாட்டு.!
இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவு முறையில் கடந்த ஒரு மாதமாக சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் மாலத்தீவு நாட்டைச் சார்ந்த மூன்று மீன்பிடி கப்பல்களில் இந்திய கடற்படையினர் அத்துமீறி நுழைந்ததாக பன்னாட்டு பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டி இருக்கிறது . இது தொடர்பாக மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தங்கள் நாட்டைச் சார்ந்த மீன் பிடி கப்பல்களில் அந்நிய நாட்டு ராணுவ வீரர்கள் ஏறியதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மூன்று மீன் பிடி கப்பல்களில் இந்திய கடற்படை வீரர்கள் அனுமதியின்றி நுழைந்ததாக அந்நாட்டு ராணுவம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் மாலத்தீவு மீன் பிடி கப்பல்கள் தங்களது சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படை வீரர்கள் அத்துமீறி நுழைந்தது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மாலத்தீவு நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மீன்பிடித்த போது சர்வதேச விதிமுறைகளை மீறிய இந்திய கடற்படையினர் மாலத்தீவு மீன் பிடி கப்பல்களில் அத்துமீறி நுழைந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த அத்துமீறல் சம்பவம் பற்றிய தெளிவான விளக்கங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
டிரான்ஸ்பாண்டர் என்பது கப்பலின் நிலை, அடையாளம் மற்றும் பிற தகவல்களை வழங்கும் ஒரு தானியங்கி அடையாள கருவியாகும். சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி இந்தோனேசிய தீவு கூட்ட கடல் பாதைகளில் பயணங்களை மேற்கொள்ளும் கப்பல்கள் வேலை செய்யக்கூடிய டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது விதியாகும். மாலத்தீவு கப்பல்களில் டிரான்ஸ்பான்டர்கள் மூன்று முறை அணைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய கடற்படையினர் சிறப்பு பொருளாதார மண்டலத்திலிருந்து மாலத்தீவு கப்பல்களை வெளியேறச் சொன்னதாக ஆசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.