முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை இடைநீக்கம்!… ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்காததால் அதிரடி!

05:25 AM May 18, 2024 IST | Kokila
Advertisement

Boxing: ஊக்க மருந்து சோதனைக்கு கடந்த ஒரு வருடமாக ஒத்துழைக்க மறுத்ததாக கூறி இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடாவை இடை நீக்கம் செய்து உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை அறிவித்துள்ளது.

Advertisement

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா, கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்திருந்தார்.

இந்தநிலையில், ஊக்க மருந்து சோதனை நடத்த தான் இருக்கும் இடம் குறித்த தகவலை கடந்த ஒரு ஆண்டில் 3 முறை அளிக்க தவறிவிட்டார். இதனையடுத்து பரவீன் ஹூடாவை 1½ ஆண்டு காலம் இடைநீக்கம் செய்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் இருந்து தொடங்கும் அவரது தடை காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறது. இதனால் அவர் பெற்ற ஒலிம்பிக் கோட்டாவை இந்தியா இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து பரவீன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Readmore: பாத்ரூம் வீடியோவை லீக் செய்த முன்னாள் காதலன்! – இவ்வளவு கீழ்த்தரமானவரா..? பிரபல நடிகை ஆதங்கம்

Advertisement
Next Article