வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.! வங்கிக் கூட்டமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை.!
இந்த வருடத்தின் இறுதி மாதமான டிசம்பரில் வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை இந்திய வங்கிகள் கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கிறது. இதனால் வங்கிப் பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர் சங்கங்களால் வலியுறுத்தப்பட்ட வலியுறுத்தப்பட்ட ஊதிய உயர்வுக்கு இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்திருக்கிறது.
மேலும் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு நவம்பர் மாதம் 2022 ஆம் வருடத்தில் இருந்து அமலாகும் என தெரிவித்திருக்கிறது. இதனால் வங்கி ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருவதால் வங்கிகளுக்கு 7898 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனவும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.