For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்களுடன் இந்திய தூதர் சந்திப்பு.! முக்கிய தகவலை வெளியிட்ட வெளியுறவுத் துறை.!

11:36 AM Dec 08, 2023 IST | 1newsnationuser4
மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்களுடன் இந்திய தூதர் சந்திப்பு   முக்கிய தகவலை வெளியிட்ட வெளியுறவுத் துறை
Advertisement

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கத்தார் நாட்டு சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரையும் இந்திய தூதர் சந்தித்து பேசி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement

கத்தார் நாட்டில் உள்ள அல் தஹரா குளோபல் டெக்னாலஜி அண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தில் இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் பாதுகாப்பு ஆலோசகர்களாக பணியாற்றி வந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உணவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்தது கத்தார் அரசு.

இது தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 8 பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இது தொடர்பாக இந்தியாவின் சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீடு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அது குறித்த தகவல்களை பகிர்ந்து இருக்கிறார் வெளி உறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பாக்ஷி.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரின் முறையீடு விசாரணை இரண்டு முறை நடைபெற்றிருக்கிறது. முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கும் தேவையான சட்ட ஆலோசனைகளையும் அனைத்து உதவிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். இது தொடர்பாக சிறையில் இருக்கும் 8 பேரையும் இந்திய தூதர் சென்று சந்தித்து வந்திருக்கிறார் என தெரிவித்தார்.

Tags :
Advertisement