For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியாவுக்கு விரைவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்...! 2024 மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டைத் தொடங்கும்...!

07:25 AM Dec 27, 2023 IST | 1newsnationuser2
இந்தியாவுக்கு விரைவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்      2024 மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டைத் தொடங்கும்
Advertisement

வானிலை முன்னறிவிப்பு, பருவநிலை ஆய்வுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்; புவி அறிவியல் துறை ஏற்கனவே ஒரு குறுகிய கால திட்டத்தைக் கொண்டுள்ளது. இப்போது 2047-ம் ஆண்டில் இந்திய தற்சார்பு திட்டத்தை உருவாக்க அமிர்த காலத்துக்கான திட்டத்தை வகுத்து வருகிறது.

இது பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதில் இந்தியாவின் தலைமைப் பங்கை உலக சமூகம் உணர்ந்துள்ளது என்பதை நிரூபிக்கிறது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும், அதன் ஆண்டு கொண்டாட்டங்களின் போது பள்ளி மாணவர்களை அணிதிரட்டுமாறு இந்திய வானிலை ஆய்வு மையத்தை கேட்டுக் கொண்டார்.

பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவை உலகளாவிய கவலைகள் என்றும் மாசுபாடு, அதிகனமழை மற்றும் கன மழை போன்ற தீவிர வானிலையின் உடனடி நிகழ்வு பூமியில் பரந்த பருவநிலை மாற்றத்தின் விளைவாக இருப்பதால், அனைத்து நபர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார். இந்தியா தனது அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை விரைவில் அறிமுகம் செய்து, அடுத்த மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டைத் தொடங்கும் என்றார்.

Advertisement