144 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா முதலிடம்…! 2வது இடம் எந்த நாடு தெரியுமா..?
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) உலக மக்கள் தொகை நிலை - 2024 அறிக்கையின் படி உலக அளவில் இந்தியா 144.17 கோடி மக்கள்தொகையுடன் முதலிடத்திலும், சீனா 142.5 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகையில் 24 சதவீதம் பேர் 0-14 வயதுடையவர்கள் என்றும், 17 சதவீதம் பேர் 10-19 வயது வரம்பிற்குள் இருப்பதாகவும், 10-24 வயதுடைய பிரிவினர் 26 சதவீதமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, 15-64 வயதிற்குட்பட்டவர்கள் 68 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்தியாவின் மக்கள்தொகையில் 7 சதவீதம் பேர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக 71 ஆண்டுகள் என்றும் பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 74 ஆண்டுகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் 30 ஆண்டுகால முன்னேற்றம் என்றும், பெரும்பாலும் உலகளவில் மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களை புறக்கணித்துள்ளதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.
மேலும் இந்தியாவில் மகப்பேறு இறப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், தாய் இறப்பு அபாயத்தில் இந்தியா தொடர்ந்து வியத்தகு ஏற்றத்தாழ்வுகளைக் காண்கிறது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. தற்போது 2024ல் 144.17 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.