For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

20 வருடங்களில் 2.33 மில்லியன் ஹெக்டேர் மரங்களை இழந்த இந்தியா ; குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் அதிர்ச்சி தகவல்

05:55 PM Apr 14, 2024 IST | Mari Thangam
20 வருடங்களில் 2 33 மில்லியன் ஹெக்டேர் மரங்களை இழந்த இந்தியா   குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் அதிர்ச்சி தகவல்
Advertisement

20 வருடங்களில் 2.33 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு உள்ள மரங்கள் இழக்கப்பட்டிருப்பதாக குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் கண்காணிப்புத் திட்டத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

2002 முதல் 2023 வரை 4,14,000 ஹெக்டேர் ஈரப்பதமான முதன்மைக் காடுகளை (4.1 சதவீதம்) நாடு இழந்துள்ளது என்று குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச், செயற்கைக்கோள் தரவு மற்றும் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி கூறுகிறது.

2001ம் ஆண்டு முதல் 2022 க்கு இடைப்பட்ட காலங்களில், இந்தியாவில் உள்ள காடுகள் ஒவ்வொரு வருடமும் 141 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை அகற்றியது. இது ஒரு வருடத்திற்கு 89.9 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு நிகர கார்பன் சிங்க்கைக் குறிக்கிறது. இப்போது அதே கடந்த 20 ஆண்டுகளில் 2.33 மில்லியன் ஹெக்டர் மரங்கள் இல்லாது போன சூழலில், நான் வெளியிடுகிற, தொழிற்சாலைகள் வெளியிடுகிற கார்பன் டை ஆக்சைடை எங்கே சென்று சலவை செய்வீர்கள்?

உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு வெப்பமண்டல மழைக்காடுகள் அழிந்து விட்டன என்று பகீர் கிளப்புகிறது அந்த ஆய்வறிக்கை. மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை இறுதி செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இந்தியாவில் மரங்களின் உறை இழப்பின் விளைவாக ஆண்டுக்கு சராசரியாக 51.0 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டது. மொத்தத்தில், இந்த காலகட்டத்தில் 1.12 ஜிகாடன் கார்பன் டை ஆக்சைடு சமமாக வெளியேற்றப்பட்டது.

காடுகள் கார்பனின் மூலமாகும், காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடை அகற்றி, அவை சிதைக்கப்படும் போது கார்பன் டை ஆக்சைட் குறைகிறது. காடுகளின் இழப்பு, மிக மோசமான பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும். இதனால், பருவநிலை மாற்றம் துரிதப்படுத்தப்படுகிறது.

மரத்தின் இழப்பு என்பது வெறும் காடுகள் அழிக்கப்படுவது மட்டுமல்ல, பொதுவாக மனிதனால் ஏற்படும், இயற்கையான காடுகளை நிரந்தரமாக அகற்றுவதைக் குறிக்கிறது. மனிதனால் ஏற்படும் இழப்பு மற்றும் இயற்கை தொந்தரவுகள் மற்றும் நிரந்தரமான அல்லது தற்காலிகமான இழப்பு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. மரம் வெட்டுதல், தீ, நோய் அல்லது புயல் சேதம் ஆகியவற்றால் ஏற்படும் இழப்பு ஆகியவையும் இதில் சேர்த்து தான் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 2013 முதல் 2023 வரை 95 சதவீத மரங்களின் இழப்பு இயற்கை காடுகளுக்குள் ஏற்பட்டதாக புள்ளி விவரங்கள் காட்டுகிறது. 2017ல் அதிகபட்சமாக 189,000 ஹெக்டேர் மரங்கள் இந்தியாவில் அழிந்துள்ளன. 2016ல் 175,000 ஹெக்டேர் மரங்களையும், 2023ல் 144,000 ஹெக்டேர் மரங்களையும் இந்தியா இழந்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.

சராசரியாக 66,600 ஹெக்டேர்களுடன் ஒப்பிடும் போது, அஸ்ஸாமில் அதிகபட்சமாக 324,000 ஹெக்டேர் மரங்கள் அழிந்துள்ளன. மிசோரம் 312,000 ஹெக்டேர் மரங்களையும், அருணாச்சல பிரதேசம் 262,000 ஹெக்டேர்களையும், நாகாலாந்து 259,000 ஹெக்டேர்களையும், மணிப்பூர் 240,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்களையும் இழந்துள்ளன.

குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச்சில் இடம்பெற்றுள்ள மர அட்டை இழப்பு தரவு, உலகம் முழுவதும் காடுகள் எவ்வாறு மாறுகின்றன என்பது குறித்த சிறந்த புள்ளிவிவரங்களைக் குறித்திருக்கிறது. இருப்பினும், அல்காரிதம் சரிசெய்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் தரவு காரணமாக காலப்போக்கில் தரவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

2002 முதல் 2022 வரை ஏற்பட்ட தீயினால் இந்தியா 35,900 ஹெக்டேர் மரங்களை இழந்துள்ளதாக தரவு முடிவுகள் காட்டுகிறது, 2008ல் தீயினால் (3,000 ஹெக்டேர்) அதிகபட்ச மரங்கள் மறைந்துள்ளது. 2001ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை, ஒடிசாவில், தீயினால் மரங்கள் அதிக அளவில் இழப்பு ஏற்பட்டு, ஆண்டுக்கு சராசரியாக 238 ஹெக்டேர் இழப்பு ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசம் 198 ஹெக்டேர், நாகாலாந்து 195 ஹெக்டேர், அஸ்ஸாம் 116 ஹெக்டேர், மேகாலயா 97 ஹெக்டேர்களை இழந்துள்ளன.

Tags :
Advertisement