For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியா - ஆஸி பைனல்!… விண்ணை முட்டும் ஹோட்டல் வாடகை!… ஒரு நைட்க்கு ஒரு லட்சமாம்!

07:58 AM Nov 17, 2023 IST | 1newsnationuser3
இந்தியா   ஆஸி பைனல் … விண்ணை முட்டும் ஹோட்டல் வாடகை … ஒரு நைட்க்கு ஒரு லட்சமாம்
Advertisement

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு, அகமதாபாத் ஹோட்டல் அறையின் சராசரி விலை ஒரு இரவுக்கு ரூ.10,000 முதல் ஒரு லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

Advertisement

இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெறும் ஐ.சி.சி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை உற்சாகப்படுத்த ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஹோட்டல் கட்டணங்கள் மற்றும் நகரத்திற்கான பயண டிக்கெட்டுகளில் அபரிதமான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், ஹோட்டல் அறையின் சராசரி விலை ஒரு இரவுக்கு ரூ.10,000 என வசூலிக்கப்படுகிறது. அகமதாபாத்தில் நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு இரவுக்கு ரூ.1 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக மனிகண்ட்ரோல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை போட்டி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அகமதாபாத்தில் தங்கும் விடுதிகளின் விலை அதிரடியாக அதிகரித்து வருகிறது. அக்டோபருக்குள், ஹோட்டல்களுக்கான டிக்கெட் விலைகள் ஒரு இரவுக்கு ரூ. 24,000ல் இருந்து ரூ. 2,15,000 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் அகமதாபாத் செல்வதற்கான விமான டிக்கெட்டுகளின் விலையும் 100 மடங்கு அதிகரித்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது ஓட்டல்களின் விலைகள் அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. புக்கிங்.காம், மேக் மை ட்ரிப் மற்றும் அகோடா போன்ற ஹோட்டல் முன்பதிவு தளங்களிலும் ஹோட்டல் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement