சிறையில் இருந்தே வெற்றி கண்ட சுயேட்சை வேட்பாளர்..!! எந்த தொகுதி..? எத்தனை வாக்குகள் தெரியுமா..?
லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இதேபோன்று காஷ்மீர், டாமன் டையூ தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். லடாக் மக்களவைத் தொகுதியில் இன்று காலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், சுயேட்சை வேட்பாளர் முகமது ஹனீஃபா 28,616 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். இவர் 64,157 வாக்குகள் பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் டிசெரிங் நம்க்யால் 35,541 வாக்குகளும், பாஜக வேட்பாளர் தாஷி காயல்சன் 30,643 வாக்குகளும் பெற்றுள்ளார். இதேபோல், காஷ்மீரின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் 1,95,126 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். அவர் 4,33,213 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா, 2,38,087 வாக்குகள் பெற்றார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் சிறையில் உள்ளார். சிறையில் இருந்தவாறு அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒமர் அப்துல்லா, தேர்தல் முடிவை ஏற்க வேண்டியது தவிர்க்க முடியாதது. வடக்கு காஷ்மீரில் ரஷீத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் என்று நான் நம்பவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
Read More : அமோக வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி..!! தொண்டர்கள் கொண்டாட்டம்..!!