Indeed Layoffs: 1,000 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த வேலை வாய்ப்பு நிறுவனம்.!!
வேலைவாய்ப்பை வழங்கும் தளமான 'Indeed' அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 1,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 8 சதவீதமாகும்.
பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய எடுத்த முடிவு அதன் நிறுவன கட்டமைப்பை எளிதாக்குவதற்கும், நெறிப்படுத்துவதற்கும் எடுத்த முடிவு என தெரிவித்துள்ளது. அதன் பணியாளர் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதையும் தற்போதைய வணிகத் தேவைகளுடன் அதன் வளங்களை சிறப்பாகச் சீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்பவும், எதிர்கால வளர்ச்சிக்காக தன்னை நிலைநிறுத்தவும் பணி நீக்க நடவடிக்கைகள் உதவும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தற்போதைய நிலைமைக்கு தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் பொறுப்பேற்றுள்ளதாக Indeed நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட மெமோவில் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் கூறினார். கடந்த காலங்களில் பணியமர் தொழில் ஏற்பட்ட மந்த நிலை இதற்குக் காரணம் என்று அவர் கூறினார், இது தொடர்ச்சியான பல காலாண்டுகளில் விற்பனை சரிவுக்கு வழிவகுத்தது எனவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நிறுவனம் சர்வதேச அளவில் 2,020 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. ஆனால் தற்போதைய பணிநீக்கம் அமெரிக்காவை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்படும் என ஹைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த பணி நீக்கம் முக்கியமாக ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் மார்க்கெட்டிங் டீம்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
கடந்தாண்டு மார்க் ஜுக்கர்பெர்க் மெட்டா நிறுவனத்தில் செய்தது போல இந்த நிறுவனமும் தங்களது நிர்வாக அடுக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதனால் நிறுவனத்தை நெறிப்படுத்துவதிலும் இந்த முடிவு உதவுகிறது. கடந்த வருடம் மிட்டா நிறுவனத்தின் சிஇஓ ஜுக்கர்பெர்க் தங்களது நிறுவனத்தின் நிர்வாக அமைப்பை சிரமக்க இது போன்ற ஒரு திட்டத்தை பயன்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்கள் வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் எளிமைப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம், ஆனால் இலக்கு மற்றும் மாற்றம் இல்லாமல் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தை எங்களால் பெற முடியாது," என்று ஹைம்ஸ் மெமோவில் கூறினார்.
பணி நீக்கம் குறித்து விரிவாக பேசிய ஹைம்ஸ் இது தொடர்பாக மனித வளத்துறை சட்டபூர்வமான நடவடிக்கைகள் மற்றும் சம பங்கு உள்ளிட்டவை குறித்து பணி நீக்கத்தால் தாக்கத்தை சந்திக்கும் டீம்களுடன் நீண்ட பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் பணி நீக்கம் எந்த ஒரு துறையையும் பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் பணி நீக்கம் தொடர்பான மனஸ்தாபங்கள் மற்றும் கேள்விகள் குறித்து விவாதிக்க நிறுவன ஊழியர்களுக்கு இடையேயான மீட்டிங்கை செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த அவர் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட ஆர்கனைசேஷனல் சார்ட் புதன்கிழமை வெளியிடப்படும் என்று கூறினார்.
Read More: சுச்சி லீக்ஸ்..!! அந்த ஃபோட்டோவை கொடுத்ததே த்ரிஷா தான்..!! என் Ex கணவர் ஒரு Gay..!!