முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

IND vs PAK Women T20!. பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்!. அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது இந்திய மகளிர் அணி!.

IND vs PAK Women T20!. Defeating Pakistan is great! The Indian women's team retained the semi-final opportunity!
06:58 AM Oct 07, 2024 IST | Kokila
Advertisement

Ind Vs Pak: டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இந்திய மகளிர் அணி தக்கவைத்துள்ளது.

Advertisement

துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீராங்கனைகள், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ரன் குவிக்க முடியாமல் திணறினர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நிடா தார் 28 ரன் (34 பந்து, 1 பவுண்டரி), முனீபா அலி 17, கேப்டன் பாத்திமா சனா 13 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர் (2 பேர் டக் அவுட்). சைதா அரூப் ஷா 14 ரன், நஷ்ரா சாந்து 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அருந்ததி ரெட்டி 4 ஓவரில் 19 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஷ்ரேயங்கா பட்டீல் 2, ரேணுகா சிங், தீப்தி ஷர்மா, ஆஷா சோபனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா வீராங்கனைகள். மந்தனா 7 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். பொறுப்புடன் விளையாடிய ஷபாலி 32 ரன் (35 பந்து, 3 பவுண்டரி), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 23 ரன் எடுக்க, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன் எடுத்து காயம் காரணமாக ஓய்வு பெற்றார்.

இந்தியா 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. தீப்தி ஷர்மா 7 ரன், சஜீவன் சஜனா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. அருந்ததி ரெட்டி சிறந்த வீராங்கனை விருது பெற்றார். முதல் போட்டியில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்த இந்தியா, 2வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. அடுத்து 3வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

Readmore: நவராத்திரி 5ம் நாள்!. ஸ்கந்தமாதா தேவி அவதாரத்தில் துர்கை!.

Tags :
IND vs PAK Women T20Indian women's teamSemi final
Advertisement
Next Article