IND vs ENG டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி?
IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயத்தில் இருந்து குணமடைந்து அணியில் இணைந்துள்ளது பலம் சேர்க்கக்கூடும். கடைசியாக அவர், 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையடி இருந்தார். அந்தத் தொடரில் ஷமி முதல் 4 ஆட்டங்களில் விளையாடாத போதிலும், 24 விக்கெட்களை வேட்டையாடி அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியிருந்தார். தற்போது ஜஸ்பிரீத் பும்ரா விளையாடாத நிலையில் ஷமி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தோல்விக்கு பின்னர் இந்திய அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க கடுமையாக போராடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தோல்விக்கு பின்னர் இந்திய அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க கடுமையாக போராடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 13 போட்டிகளிலும் , இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணி - சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்).
Readmore: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களே உஷார்!. இந்த ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யாதீர்கள்!. FBI எச்சரிக்கை!.