IND vs Ban T20!. மாபெரும் வரலாற்று சாதனை!. வங்கதேசத்தை அலறவிட்ட இந்திய அணி!.
IND vs Ban T20: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி, குவாலியரில் துவங்கியது. புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமந்த் மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் 2 பந்தில் 4 ரன்கள், பர்வேஸ் உசைன் யமான் 9 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து கேப்டன் நஜ்முல் சாந்தோ 25 பந்தில் 27 ரன், தவ்ஹித் ஹ்ரிடாய் 18 பந்தில் 12 ரன், மகமதுல்லா 2 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் நட்சத்திர வீரர் மெஹதி ஹசன் மிராஸ் தாக்குப்பிடித்து விளையாடி 32 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். 19.5 ஓவரில் பங்களாதேஷ் அணி ஆல் அவுட் ஆகி 127 ரன்கள் எடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின் வந்த வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 31 ரன்கள் தந்து 3 விக்கெட் கைப்பற்றினார். அர்ஸ்தீப் சிங் தன் பங்குக்கு 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 7 பந்தில் 16 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்திய அணி பவர் பிளேவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து இன்னொரு துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 19 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து நிதீஷ் குமார் ரெட்டி 15 பந்தில் 16 ரன், ஹர்திக் பாண்டியா 16 பந்தில் 39 ரன்கள் என இருவரும் ஆட்டமெலக்காமல் எடுக்க இந்திய அணி 11.5 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில், இந்திய அணி பவர் பிளேவில் 71/2 ரன்களை குவித்தது. வங்கதேசத்திற்கு எதிராக, இதுதான் சிறந்த பவர் பிளே ஸ்கோராக இருக்கிறது. அதாவது, இந்த வெற்றியின் மூலம் 100 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்தும்போது, டி20 வரலாற்றில் இந்தியாவின் விரைவான ரன் சேஸ் என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 2023ஆம் ஆண்டில், இந்தியா 68/1 ரன்களை எடுத்ததே, சிறந்த பவர் பிளே ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: செம சான்ஸ்!. SBI வங்கியில் வேலை வேண்டுமா?. 10,000 காலியிடங்கள்!. புதிதாக ஆட்சேர்ப்பு நடத்த திட்டம்!