IND vs AUS 4வது டெஸ்ட்!. சதம் விளாசிய ஸ்மித்!. 450 ரன்களை கடந்து வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!.
IND vs AUS : மெல்போர்னில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் 450 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
மெல்போர்னில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இப்போட்டியின் மூலம் அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவிற்கு எதிராக குறிப்பாக 4,483 பந்துகளுக்கு பிறகு சிக்சர் அடித்த வீரராக மாறி சாதனை படைத்தார். நிதானமாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 57 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 72 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், பும்ரா பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். மிட்சல் மார்ஸ் 4 ரன்களிலும் அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் ஆட்டமிழந்தனர். இறுதியாக முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இன்று 2ம் நாள் ஆட்டத்தில் 63 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பேட் கம்மின்ஸ் ஜடேஜா பந்துவீச்சில் அவுட்டாகினார். தற்போதைய நிலவரப்படி அதிரடி சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித் 193 பந்துகளில் 139 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 34 பந்துகளில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் 450 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
Readmore: பேரிழப்பு!. 2024ல் மண்ணை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்!. யார் யார் தெரியுமா?