பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000..!! வரும் 10ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இலவச வேட்டி, சேலைகள், பச்சரிசி, கரும்பு மற்றும் ரூ.1,000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது.
யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும்..?
குறிப்பாக, பொங்கல் பரிசு ரூ.1,000 ரொக்கத்தை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே பெற முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொருளில்லா அடைத்தாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. இவர்களை தவிர்த்து மற்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 10ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், 10ஆம் தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் முன்பு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசின் கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். எனவே, வரும் நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : நரம்புத் தளர்ச்சியா..? அப்படினா உங்கள் உணவில் இதை சேர்க்க மறந்துறாதீங்க..!! ஏராளமான நன்மைகள்..!!