அதிகரித்து வரும் காற்று மாசுபாடு!. வயதானவர்கள் இந்த தவறை செய்யக்கூடாது!. உயிருக்கே ஆபத்து!
Air Pollution: காற்று மாசுபாடு இறப்புகளுக்கான மூன்றாவது பெரிய காரணம் ஆகும். இதனால், வயதானவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இந்தியா உட்பட உலகம் முழுவதும் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்து வருகிறது. உணவு, தண்ணீர் மற்றும் சுத்தமான காற்று மனிதர்களுக்கு மிகவும் முக்கியம். தொழிற்சாலைகள், மின்சாரம், எரியும் நிலக்கரி, மரம் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் மாசு ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. உண்மையில், உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ, மாசு மிக வேகமாக பரவுகிறது. காற்று மாசுபாடு காரணமாக, வயதானவர்கள் பல கடுமையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, மாசுபட்ட காற்றில் உள்ள PM 2.5 இன் சிறிய துகள்கள் மிகவும் ஆபத்தானவை. நல்ல தரமான N95 அல்லது N99 முகமூடியை அணிவதன் மூலம், இந்த துகள்கள் வடிகட்டப்பட்டு, சுவாசத்தின் மூலம் உடலுக்குள் நுழைவதை தடுக்கிறது. இதனால் பல வகையான சுவாச நோய்கள் வராமல் தடுக்கலாம். எப்போதும் NIOSH சான்றளிக்கப்பட்ட முகமூடியை அணியுங்கள்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மாசுபாடு அதிகமாக இருக்கும்போது அதன் விளைவு வீட்டிற்குள்ளும் காணப்படுகிறது. வீட்டில் உள்ள ஸ்க்ரீன் துணிகள், சோபா கவர்களில் அழுக்குகள் தேங்கி தூசியாக வெளியேறுகிறது. இந்த காரணத்திற்காக, ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடுவது நல்லது. இருப்பினும், ஜன்னல்கள் அல்லது கதவுகளை 24 மணி நேரம் மூடி வைக்கக் கூடாது. ஏனென்றால், ஜன்னல்கள் அல்லது கதவுகளைத் தொடர்ந்து மூடுவதால், துகள்கள் வீட்டில் தங்கி, பல சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, மதியம் சிறிது நேரம் ஜன்னல், கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும்.
அதிக நெரிசலில் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவும். தேவையில்லாத பட்சத்தில் சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்காதீர்கள். வெளியே செல்வதாக இருந்தால், N-95 முகமூடியை மட்டும் அணியுங்கள்.
Readmore: ஷாக்!. குழந்தை திருமண அபாயத்தில் 11.5 லட்சம் குழந்தைகள்!. NCPCR அறிக்கை!