For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குளிர்காலங்களில் பெண்களை அதிகமாக தாக்கும் முகவாதம்.! அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.!

05:55 AM Dec 03, 2023 IST | 1newsnationuser4
குளிர்காலங்களில் பெண்களை அதிகமாக தாக்கும் முகவாதம்   அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
Advertisement

பொதுவாகவே நமது பகுதிகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் நிலவும். இந்த குளிர்காலத்தில் ஜில்லு என்ற வானிலையில் காலாற நடப்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. எனினும் கடும் குளிர் காரணமாக சளி ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இது போக பெண்களை குளிர்காலத்தில் தாக்கும் ஒரு கொடிய வியாதி தான் முகவாதம். இது பெரும்பாலானவர்களுக்கு அறியாத ஒன்றாகவே இருக்கிறது.

Advertisement

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் போது அல்லது சிரிக்கும்போது வாய் ஒரு பக்கமாக கோணலாகும். பாதிக்கப்பட்ட பக்கத்தில் இருக்கும் கண்ணை மூட முடியாது. மேலும் தண்ணீர் குடிக்கும் போது வாய் வழியாக வடியும். உணவு சாப்பிடும் போது வாயின் உட்பகுதி பற்களுக்கு இடையே மாட்டி காயம் ஏற்படும். மேலும் நாவிற்கு சுவை தெரியாது. இவை அனைத்தும் முகவாதத்திற்கு உரிய அறிகுறிகள் ஆகும்.

அதிகமான பனி சூழல் காரணமாக குளிர்ந்த காற்று காது வழியாக முக அசைவிற்கு ரத்தத்தை கடத்திச் செல்லும் நரம்புகளில் நீர் கோர்த்து அதன் சிறு துவாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக முகத்தில் இருக்கும் தசைகள் செயலிழந்து முகவாதம் ஏற்படுகிறது. குறிப்பாக இது அதிகாலையில் எழும் பெண்களை தாக்குகிறது. மேலும் காலையில் எழுந்து நடை பயிற்சி மற்றும் ஜன்னல் ஓரங்களில் அமர்ந்து பயணம் செய்பவர்களையும் தாக்குகிறது.

இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் பிசியோதெரபி மருத்துவர்களிடம் சிகிச்சை மற்றும் அறிவுரைகள் பெற வேண்டும். பிசியோதெரபி சிகிச்சைகளின் மூலம் செயலிழந்த தசைகள் மின் தூண்டலால் மீண்டும் செயல்பட தொடங்கும். இது போன்ற முகவாதம் ஏற்படாமல் தடுக்க அதிகாலையிலேயே வேலை செய்யும் போது மற்றும் பயணங்கள் மேற்கொள்ளும் போது காதுகளை மப்ளர் மற்றும் ஸ்கார்ப் கொண்டு நன்றாக மறைத்துக் கொள்ள வேண்டும்.

Tags :
Advertisement