For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எந்த வீட்டில் கூட சமையல் அறை கிடையாது..!! இந்தியாவில் இப்படி ஒரு கிராமமா? - எங்க இருக்கு தெரியுமா?

In this post, you can see about the Indian village where even a meal is not cooked and eaten at home
03:35 PM Oct 28, 2024 IST | Mari Thangam
எந்த வீட்டில் கூட சமையல் அறை  கிடையாது     இந்தியாவில் இப்படி ஒரு கிராமமா    எங்க இருக்கு தெரியுமா
Advertisement

வீட்டில் ஒரு வேளை சமைக்காமல் வெளியில் சாப்பிடுவது என்றாலே சில சமயங்களில் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். ஆனால் இங்கு ஒரு கிராமமே வீடுகளில் சமைப்பதே இல்லையாம். குஜராத்தில் உள்ள சந்தங்கி கிராமம் தான் அது. சந்தங்கி கிராமம் மெஹ்சானா மாவட்டத்தில் பெச்சராஜி தாலுக்காவில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் யாரும் சமைப்பதில்லை. இந்த கிராமம் அதன் தனித்துவமான நடைமுறையால் இப்போது கவனம் பெறுகிறது.

Advertisement

ஒரு காலத்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் வசித்த சந்தங்கியில் இன்று சுமார் 500 கிராம மக்கள் உள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தில் ஆண்களின் எண்ணிக்கை 117 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 133 ஆகும். ஆனால் தற்போது கிராமத்திற்கு வேலைக்காக வந்தவர்கள் உட்பட குறைந்தது 1,000 பேர் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இவர்கள் யாரும் தங்கள் வீடுகளில் சமைப்பது கிடையாதாம்.

பின்னர் எப்படி சாப்பிடுகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழும். அந்த கிராம மக்கள் தனிப்பட்ட சமையல் அறை ஒரு போதும் பயன்படுத்துவது கிடையாது. ஊருக்கே பொதுவான ஒரு சமையல் கூடம் ஒன்று உள்ளது. இங்கு தான் அனைத்து மக்களுக்கும் சமையல் தயார் செய்யப்படுகிறது. இதற்காக ஒரு நபர் மாதம் ரூ.2000 கொடுக்க வேண்டும். அவர்களுக்கு சமைப்பதற்காக மாதம் ரூ.11,000 ஊதியத்தில் ஒரு சமையல் காரர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஆரோக்கியமான மற்றும் குஜராத்தி வகை உணவுகளை சமைத்துக் கொடுத்து வருகிறார்.

Read more ; மாதம் ரூ.1,23,000 சம்பளம்..!! இந்த கல்வி தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement