திருப்பதி பெருமாளுக்கு சாத்தப்படும் வஸ்திரம் இந்த சிவனுக்கும் சாத்தப்படுமாம்..!! கோயில் எங்க இருக்கு தெரியுமா..?
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்தாவில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற சிவ மந்திர் ஆலயம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோவில் உருவான கதை : தற்போது கோயில் அமைந்திருக்கும் இடம் முற்காலத்தில் மயானத்திற்குரியதாக செயல்பட்டது. 1980 ஆம் ஆண்டிற்கு முன்பு, விமான நிலையம் கட்ட ஏற்பாடு நடக்கையில், காடுகள் மற்றும் பெரும் பகுதி மயானம் நீக்கப்பட்டன. 5-6 தலைமுறையாக சிந்து மக்கள் இங்கே வசித்ததால், இந்த ஊர் சிட்டிசன்கள் ஆகிவிட்டனர். சுடுகாடு இருந்த காரணம், சுடுகாட்டிற்கு அதிபதியான சிவபெருமானின் சிறிய சிலை மரத்திற்கு கீழே பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நாளடைவில் சிவமந்திர் ட்ரஸ்ட் ஒன்றை சிந்தியர்கள் உருவாக்கினர். இந்தியர்களையும் பூஜைசெய்ய அனுமதித்தனர். அப்போதிருந்த, இந்திய பிராமண சமூகம் பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து, அபிஷேகம், பூஜைகளென செய்யத் தொடங்கினார்கள். பின்னர் உத்ஸவர் வந்தார். 48 நாட்கள் விடாமல் பூஜை நடந்தது. மற்ற கடவுள்களுக்கும் சந்நிதிகள் உருவாகின. சிவபெருமான் மட்டுமல்லாது, பிள்ளையார், பெருமாள், தாயார், முருகர், ஐயப்பர், நவ கிரகங்கள், ஆஞ்சநேயர் என பல தெய்வங்கள் அந்த கோயிலில் உள்ளது.
திருப்பதி பெருமாளுக்கு சாத்தப்படும் வஸ்திரம் வரவழைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும், இங்கேயுள்ள பெருமாளுக்கு மாத திருவோண நட்சத்திரமன்று சார்த்தப்படுவது விசேஷமாகும். இந்த கோயிலுக்கு உலகெங்கிலும் இருந்து பல்வேறு மக்கள் வருகை தந்து வழிபடுகின்றனர். இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியம் உடனே கைகூடும் என்பது நம்பிக்கை..
Read more ; கணவன் கண் முன், கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி; ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்..