இந்த ஐந்து பழக்கங்களை பின்பற்றினால் பணம் தேடி வரும்..!! சாணக்கிய நீதி கூறும் அறிவுரை இதோ..
இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞரும், ஞானவேல் திகழ்ந்தவர் தான் சாணக்கியர். இவர் காலத்தில் மக்களுக்காகவும், அரசன் சிறந்த ஆட்சியை கொடுப்பதற்காகவும், பல்வேறு பொன்மொழிகளைக் கூறியுள்ளார். அதை பின்பற்றினாலே பல்வேறு பிரச்சனைகள் காணாமல் போய்விடும். வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு சாணக்கியரிடம் பல நடைமுறை உத்திகள் உள்ளன. வாழ்க்கையில் அதிக செல்லத்தை விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சாணக்கியரின் அறிவுரைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் : வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு சாணக்கியர் சொல்லும் முதல் விஷயம் எதிர்காலத்திற்காக சேமிப்பது. வருமானத்தில் பெரும் பகுதியை அத்தியாவசிய தேவைகளுக்காகவும் குறிப்பிட்டப் பகுதியை எதிர்கால இலக்குகளுக்காகவும் ஒதுக்கி வைக்க வேண்டும்.
கடன் வாங்குவதைத் தவிர்க்கவும் : கடன் ஒரு மனிதனின் மனஅமைதியையும், நிம்மதியையும் கெடுக்கும் விஷயமாகும். எனவே கடனில்லாமல் வாழ உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். கடன் வாங்கும் முன் ஒரு தெளிவான திருப்பிச் செலுத்தும் திட்டத்தை உருவாக்கி அதன்பின் கடன் வாங்கவும். உங்களால் திருப்பி செலுத்த முடியாது என்று தோண்றினால் ஒருபோதும் கடன் வாங்காதீர்கள்.
செலவில் கட்டுப்பாடு : நிதி ஸ்திரத்தன்மையை அடைய செலவுகளில் கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. பட்ஜெட்டின் அடிப்படையில் பணத்தை செலவு செய்ய வேண்டும். உங்கள் எண்ணம் போல செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். செலவினங்களைத் துல்லியமாக மதிப்பிட்டு, கிடைக்கும் வருமானத்திற்குள் செலவுகள் செய்யப்படுவதையும், எதிர்காலத்திற்காகப் பணம் ஒதுக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.
புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும் : ஒருவர் சரியான முதலீட்டின் மூலம் மட்டுமே நிதி வளர்ச்சியை அடைய முடியும். உங்கள் பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது, எனவே பல இடங்களில் முதலீடு செய்யுங்கள். இது பண இழப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் முதலீடுகளைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளவும். மற்றும் மிகவும் பொருத்தமான முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பேராசையிலிருந்து விலகி இருங்கள் : சாணக்கியரின் நீதியின் படி, யார் ஒருவன் கடினமான உழைப்பும், இதனை இலக்கை அறிவுடன் யோசிக்க கூடியவர் மட்டுமே நிச்சயமாக வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு துறையிலும் வெற்றிக்கான வழியை அடைய முடியும். அப்படிப்பட்ட நபர் பணம், மகிழ்ச்சி மற்றும் சொத்து சார்ந்த பற்றாக்குறை சந்திக்க மாட்டார். எனவே பேராசையிலிருந்து விலகி இருப்பதோடு, மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளாத நபர் தான், பணத்தை சம்பாதிப்பதற்கான அறிவார்ந்த செயல்களில் ஈடுபடுவது அவசியம்.
(பொறுப்புத் திறப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் செய்திக்காக மட்டுமே.. இதை ஏற்றுக் கொள்வதற்கு முன் சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்)
Read more ; டிஎன்பிஎஸ்சி 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு..!! குரூப் 1, குரூப் 2 தேர்வுகள் எப்போது..?