For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டென்சனா இருக்கீங்களா? அப்போ சாக்லெட் சாப்பிடுங்க..!! எத்தனை நன்மைகள் தெரியுமா?

In this collection, you will find information about chocolate, the symbol of everyone's favorite celebrations.
07:37 AM Jul 15, 2024 IST | Mari Thangam
டென்சனா இருக்கீங்களா  அப்போ சாக்லெட் சாப்பிடுங்க     எத்தனை நன்மைகள் தெரியுமா
Advertisement

எல்லாருக்கும் பிடித்த கொண்டாட்டங்களுக்கு அடையாளமாக இருக்கிற சாக்லெட் பற்றிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடும் பொருள் எதுவென்றால் அது சாக்லெட் தான். உடலுக்கு நன்மை செய்யக்கூடிய ஆன்டி ஆக்சிடெண்டுகள் சாக்லெட்களில் மிகவும் அதிகமாக நிறைந்துள்ளன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆற்றல் அதிகரிக்கும். விளையாட்டு வீரர்களின் டயட்டில் கட்டாயம் டார்க் சாக்லெட் இடம் பெற்றிருக்கும். மேலும், நாம் பயங்கர டென்சா இருக்கும்பொழுது, டார்க் சாக்லெட்டை முகர்ந்து பார்ப்பதன் மூலம் அதில் உள்ள தீட்டா அலைகள் மூளையை புத்துணர்ச்சியுடன் வைப்பதாக தெரியவந்துள்ளது.

தினமும் டார்க் சாக்லெட் சாப்பிடுவதன் மூலம் 25 சதவீதம் இதய நோய் வராமல் இருக்க வாய்ப்புள்ளது. டார்க் சாக்லெட்களில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ரத்த நாளங்களில் ரத்த உறைவினால் ரத்தக்கட்டிகள் உருவாவதை குறைத்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஞாபகத்திறனை அதிகரிக்கவும் இது உதவுகிறது. பல்லாயிரம் வருடம் பாரம்பரியத்தை கொண்ட இந்த சாக்லெட், சமைக்கக்கூடிய உணவு பொருட்களிலேயே மிக குறைவான வெப்பநிலையில் அதாவது, 93 டிகிரி பாரன்கீட்டில் கரையக்கூடிய பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாக்லெட் சாப்பிடுவதால், சூரிய வெப்பத்தால் சருமத்தில் ஏற்படும் தடிப்புகள் 25 சதவீதம் தவிர்க்கப்படுகிறது. சாக்லெட்களில் உள்ள ஃபிளேவானாய்ட்ஸ் சருமத்தை தாக்கும் அல்ட்ரா வயலெட் கதிர்களை ஊடுருவ விடாமல் எதிராக பிரதிபலிக்கிறது. சூரிய வெப்பத்தால் ஏற்படும் கட்டிகள் மற்றும் தோல் புற்றுநோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.கர்ப்பிணிப் பெண்கள் உடல் நலத்துக்கு சாக்லெட்கள் மிகவும் நல்லது. அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கிறது.

ஒருவர் தினமும் சராசரியாக 30 முதல் 60 கிராம் அளவுக்குத் தரமான சாக்லெட்கள் சாப்பிட்டால் போதுமானது. மேலும், நாம் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு சாக்லெட் கொடுக்கக்கூடாது .அந்த சாக்லெட்டில் உள்ள Theobromine என்ற வேதிப்பொருள் மனிதர்களுக்கு இனிப்பாகவும், செல்லப்பிராணிகளுக்கு விஷமாகும் அபாயம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more | உஷார் மக்களே!! விஷமாகும் சுரைக்காய்? ஆராய்ச்சியில் அதிர்ச்சி!

Tags :
Advertisement