பேய்கள் நிறைந்த திகிலூட்டும் தீவு.. ஊரையே காலி செய்துவிட்டு சென்ற மக்கள்..!! எங்கே தெரியுமா?
அமெரிக்காவில் அமைந்துள்ள பால்மைரா தீவில் நிகழும் மர்மமான விஷியங்களும், திகிலூட்டும் சம்பவங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகில் மக்கள் செல்ல ஆர்வமாக உள்ள பல இடங்கள் இருந்தாலும். செல்ல முடியாத நினைத்தாலே திகிலை ஊட்டும் மர்மமான இடங்களும் உலகில் உள்ளன. சில கதைகளில் தீவுகளில்தான் பேய்கள் அதிகம் அதிகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது நம்பிக்கைதானே தவிர அறிவியல் பூர்வமாக எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அந்த வகையில் அமெரிக்காவில் அமைந்துள்ள பால்மைரா தீவு பல மர்மங்களை உள்ளடக்கியுள்ளது.
இன்று வரை அங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை என்று கூறப்படுகிறது. இது போன்ற பல திகிலூட்டும் சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1798-ம் ஆண்டு முதல் இன்று வரை அத்தீவில் நம்பமுடியாத வகையில் பல்வேறு மர்மமான சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இறைவனால் சபிக்கப்பட்ட தீவு எனவும் அழைக்கப்படுகிறது. மனிதர்கள் மட்டுமல்ல இந்த தீவிற்கு செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களும் கூட மர்மமான முறையில் மறைந்துவிடுகின்றனவாம்.
இதற்கான காரணம் குறித்து எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் இதற்கு மாறாக சிலர் துணிச்சலாக சென்று திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இங்கு ஏதோ மர்மம் இருப்பதாகவும் அவை அத்தீவிற்கு செல்பவர்களை அச்சுறுத்துவதாகவும் கூறியுள்ளனர். தற்போது ஆராய்ச்சியாளர்கள் தீவில் மறைந்துள்ள மர்மங்கள் தொடர்பான தீவிர தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
Read more ; நீங்க நினைக்குற மாதிரி இல்ல.. பேக்கேஜ்டு ஜூஸ் குடிப்பதால் புற்றுநோய் ஏற்படலாம்.. மருத்துவர்கள் வார்னிங்!