For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அசத்தும் தமிழகம்...! 2008-க்கு பிறகு கடந்த 29 நாட்களில், 30 பேர் உடல் உறுப்பு தானம்...!

09:33 AM Jan 30, 2024 IST | 1newsnationuser2
அசத்தும் தமிழகம்     2008 க்கு பிறகு  கடந்த 29 நாட்களில்  30 பேர் உடல் உறுப்பு தானம்
Advertisement

தமிழகத்தில் கடந்த 29 நாட்களில், 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 29 நாட்களில், 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். 2024 ஜனவரி 1 முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2008க்கு பிறகு ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம் 48 பேர், கல்லீரல் 27 பேர், இதயம் 10 பேர், நுரையீரல் 13 பேர்என தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு:

அரசின் புதிய விதிமுறைகளின்படி, உயிரிழந்தவர்களின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான 65 வயது என்ற உச்ச வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்த வயது நபரும், இறந்தவரின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம். இதே போல, இறந்தவரின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த வாழுமிடம் போன்ற விதிமுறையையும் ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டின் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ் மூன்றடுக்கு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. மேலும், இது தொடர்பாக www.notto.gov.in என்ற இணையதளமும், 1800114770 என்ற உதவி எண்ணுடன் கூடிய 24 மணி நேரமும் இயங்கும் இலவச அழைப்பு மையமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Tags :
Advertisement